Home /local-news /

விருதுநகரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. இளைஞர்களே வாய்ப்பை தவறவிடாதீங்க...

விருதுநகரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. இளைஞர்களே வாய்ப்பை தவறவிடாதீங்க...

வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

Jobs in Virudhunagar | தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெறுவது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

    விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த படித்த இளைஞர்கள், பெண்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    தனியார் வேலைவாய்ப்பு முகாமில் நான்கு முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையோர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் எல்ஐசி நிறுவனத்தின் மூலமாக 30 வயது முதல் 45 வரை உள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்வார்கள் நாளை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக அதற்கான இணையதளத்தில் தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்துவிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெறுவது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.


    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Jobs, Virudhunagar

    அடுத்த செய்தி