விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய் நடிப்பில் வெளியாக உள்ள பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரெய்லரை வரவேற்று வித்தியாசமான வாசகங்கள் அடங்கிய போஸ்டர் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படம் வரும் 13ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாவதையொட்டி விஜய் ரசிகர்கள் பெரும் ஆவலாக உள்ளனர்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பீஸ்ட் படத்தை வரவேற்று இன்று தமிழகம் முடங்குகிறது என்ற வித்தியாசமான வாசகங்கள் அடங்கிய போஸ்டர் நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த போஸ்டரில் “இன்று தமிழகமே! முடங்குகிறது, இணையதள சாதனைகள் முறியடிப்பு.., இதயங்களில் நிற்காமல் துடிதுடிப்பு.., பீஸ்ட் ட்ரெய்லர் வருகையால்” என வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இன்று தமிழகமே! முடங்குகிறது-பீஸ்ட் ட்ரெய்லர் வரவேற்று போஸ்டர்
பீஸ்ட் ட்ரெய்லர் வரவேற்று வெளியாகியுள்ள போஸ்டர் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகின்றன. பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலரை காண ரசிகர்கள் பெரும் ஆர்வமாக உள்ளனர். மேலும் அருப்புக்கோட்டை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தமிழ்மணி திரையரங்கில் மாலை 5 மணி அளவில் பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரெய்லரை இலவசமாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.