Home /local-news /

விஜய் ரசிகர்களுக்கு விருந்து... முதல் பாதி சுமார்.. விருதுநகர் பீஸ்ட் கொண்டாட்டம்..

விஜய் ரசிகர்களுக்கு விருந்து... முதல் பாதி சுமார்.. விருதுநகர் பீஸ்ட் கொண்டாட்டம்..

Beast

Beast

Virudhunagar Beast Celebration | விருதுநகர் மாவட்டம் முழுவதும் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்திற்கு வரவேற்று ரசிகர்கள் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் மேளதாளங்கள் முழங்க உற்சாக நடனமாடி  கோலாகலமாக கொண்டாடி வருகின்றன. மேலும் திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் கூட்டம் அலைமோத

மேலும் படிக்கவும் ...
    விருதுநகர் மாவட்டம் முழுவதும் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்திற்கு வரவேற்று வைக்கப்பட்டுள்ள கட்அவுட்களுக்கு, விஜய் ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தும் மேளதாளங்கள் முழங்க உற்சாக நடனமாடியும் கொண்டாடி வருகின்றனர். மேலும் திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    நெல்சன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் தமிழகம் முழுவதும் இன்று அதிகாலை வெளியானது. ரசிகர்கள் அதிகாலை முதலே படம் வெளியாகும் திரையரங்குகளில் பட்டாசு வெடித்தும் மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக நடனமாடி விஜய்யின் கட்அவுட் பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    விருதுநகர் மாவட்டம் முழுவதும் பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகள் முன்பாக விழாக்கோலமாக காட்சி அளிக்கின்றன.

    அதன் ஒரு பகுதியாக விருதுநகர் கிழக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் தலைவர் சுகந்த் தலைமையில் அருப்புக்கோட்டை தமிழ்மணி திரையரங்கில் வெளியான பீஸ்ட் திரைப்படத்திற்கு வரவேற்று அதிகாலை 3:30 முதலே ரசிகர்கள் மேளதாளங்கள் முழங்க நடனமாடி பட்டாசு வெடித்தும் விஜய்யின் கட்டவுட் பேனர்களுக்கு பாலபிஷேகம் செய்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பீஸ்ட் படத்தின் ஸ்டிக்கர் இலவசமாக வழங்கப்பட்டது. ரசிகர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது திரையரங்குகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து படத்தை பார்க்கச் சென்றனர்.

    மேலும் படம் வெளியான அனைத்து திரையரங்குகளில் முதல் காட்சிக்கான டிக்கெட் விலை 500 முதல் 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். படம் வெளியாகும் முன் படத்திற்கான டிக்கெட் பெறுவதில் சிரமம் நிலவி வந்த நிலையில் தற்போது டிக்கெட்டுகள் கிடைப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் இப்படம் குறித்து கருத்து தெரிவித்த விஜய் ரசிகர் பிரதாப் கூறியதாவது, படத்தின் முதல் பாகம் சுமாராகவே உள்ளதாகவும் இரண்டாவது பாகம் நன்றாக உள்ளது. விஜய் ரசிகர்கள் என்ற முறையில் விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது என்றார்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Actor Vijay, Beast, Virudhunagar

    அடுத்த செய்தி