விருதுநகர் அருகே சாத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் தீ தொண்டு வாரத்தையொட்டி தொழிற்சாலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொழிலாளர்களுக்கு ஆபத்து காலங்களில் தீ தடுப்பு மற்றும் மீட்பு தற்காத்துக் கொள்வது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெங்கடேஸ்வரபுரம் மில் தொழிற்சாலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீ மற்றும் ஆபத்து காலங்களில் தற்காத்துக்கொள்ளும் முறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமை தாங்கினார். உதவி மாவட்ட அலுவலர் மணிகண்டன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.
வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மின்சாரத் தீவிபத்து, எண்ணையில் போன்ற பொருட்களில் ஏற்படும் தீவிபத்து, துணி மற்றும் ஏனைய பொருட்களில் ஏற்படும் தீவிபத்துக்களின் வகைகள், தீயணைக்கும் கருவிகள் குறித்த விளக்கங்கள், தீவிபத்து ஏற்படும் காரணங்கள், அதிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள், ஆகியவற்றை மாவட்ட துணை தீயணைப்பு அலுவலர் விளக்கினார்.
சாத்தூர் தீயணைப்பு பணி வீரர்கள் தீவிபத்து பாதுகாப்பு நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர். தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்கள் தீவிபத்து குறித்த சந்தேகங்களை கேட்டறிந்தனர். தீவிபத்து பாதுகாப்பு விளக்க துண்டு பிரசுரங்களை தொழிலாளர்களுக்கு தீயணைப்பு வீரர்கள் வழங்கினர். இறுதியாக தொழிற்சாலை நிர்வாக பிரிவு அலுவலர் நன்றி தெரிவித்தனர்.
செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.