Home /local-news /

வாட்ச் பழுது நீக்கும் தொழிலில் அசத்தும் அருப்புக்கோட்டை பெண்..

வாட்ச் பழுது நீக்கும் தொழிலில் அசத்தும் அருப்புக்கோட்டை பெண்..

அருப்புக்கோட்டை:

அருப்புக்கோட்டை: வாட்ச் பழுது நீக்கும் தொழிலில் அசத்தும் பெண்கள்

Arupukottai | ஆண்கள் மட்டுமே ஈடுபட்டு வரும் கடிகாரம் பழுது நீக்கும் தொழிலில் பெண் ஒருவர் கடந்த 25 ஆண்டுகளாக ஈடுபட்டு  வருவதோடு இளம் தலைமுறை பெண்களுக்கு பயிற்சி அளித்து ஊக்கப்படுத்தி வருகிறார்.

    அருப்புக்கோட்டை:  ஆண்கள் மட்டுமே ஈடுபட்டு வரும் கடிகாரம் பழுது நீக்கும் தொழிலில் பெண் ஒருவர் கடந்த 25 ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதோடு இளம் தலைமுறை பெண்களுக்கு பயிற்சி அளித்து ஊக்கப்படுத்தி வருகிறார்.

    ஆண்களுக்கு போட்டியாக அனைத்து துறைகளிலும் பெண்கள் முக்கிய பங்கு வகித்து வருவதுடன் உயர் பதவிகளை அலங்கரித்து வருகின்றனர். பெண்கள் ஈடுபடாத துறையே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த குடும்பத் தலைவி மகேஸ்வரி, ஆண்கள் மட்டுமே செய்து வந்த கடிகாரம் பழுதுபார்க்கும் தொழிலில் கடந்த 25 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். மேலும் இளம் பெண்களுக்கு வாட்ச் ரிப்பேர் செய்யும் பயிற்சி அளித்து வருவதுடன் அவர்களை தொழில் முனைவோராக மாற்றி வருகிறார்.

    மகேஸ்வரியின் கணவர் சொந்தமாக வாட்ச் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். ஓய்வு நேரங்களில் கணவருக்கு உதவியாக கடைக்கு வந்து வாட்ச் பழுது பார்க்கும் தொழிலை தனது கணவரிடம் கற்றுக்கொண்டார். அதன் பின்னர் முழு நேரமாக வாட்ச் பழுது நீக்கும் தொழிலில் கடந்த 25 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். மேலும் படித்த வேலை வாய்ப்பின்றி தவிக்கும் இளம்பெண்களுக்கு வாட்ச் பழுது நீக்கும் பயிற்சி அளித்து அவர்களை தொழில் முனைவோராக மாற்றி வருகிறார்.

    இதுகுறித்து நம்மிடம் பேசிய மகேஸ்வரி கூறியதாவது, ”கடந்த 25 ஆண்டுகளாக ஆண்கள் மட்டும் செய்து வந்த வாட்ச் ரிப்பேர் தொழிலில் நான் ஈடுபட்டு வருகிறேன். இத்தொழிலை எனது கணவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். பின்னர் சொந்தமாக கடிகாரங்களை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். இத்தொழிலில் பெண்கள் அதிகமாக ஈடுபட முக்கியமாக பொறுமை தேவையாகும். இதனால் பெண்கள் யாருடைய உதவியும் இன்றி சொந்தக்காலில் நிற்க முடியும்.\" என்றார்.

    மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில் உமா மகேஷ்வரி பிற பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பவராக திகழ்வது போற்றத்தக்கதாகும்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி