Home /local-news /

அருப்புக்கோட்டை:  ஜவுளித்துறையில் பல்வேறு சலுகைகளை எதிர்பார்த்து நெசவாளர்கள்

அருப்புக்கோட்டை:  ஜவுளித்துறையில் பல்வேறு சலுகைகளை எதிர்பார்த்து நெசவாளர்கள்

அருப்புக்கோட்டை: 

அருப்புக்கோட்டை:  ஜவுளித்துறையில் பல்வேறு சலுகைகளை எதிர்பார்த்து நெசவாளர்கள்

மத்திய பட்ஜெட்டில் ஜவுளி மற்றும் கைத்தறி, விசைத்தறி உற்பத்தி துறையில் பல்வேறு சலுகைகள் மற்றும் இறக்குமதி வரி குறைப்பு என பல்வேறு சலுகைகளை  நெசவாளர்கள், நூற்பாலை உரிமையாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    மத்திய பட்ஜெட்டில் ஜவுளி மற்றும் கைத்தறி, விசைத்தறி உற்பத்தி துறையில் பல்வேறு சலுகைகள் மற்றும் இறக்குமதி வரி குறைப்பு என பல்வேறு சலுகைகளை நெசவாளர்கள், நூற்பாலை உரிமையாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


    பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வு:-

    விருதுநகர் மாவட்டம் நூற்பாலைகள், ஜவுளி மற்றும் விசைத்தறி கைத்தறி தொழில் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் உற்பத்தியாகும் ஆடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அன்னியச் செலாவணியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் மத்திய அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைத்து வருகிறது.

    இந்நிலையில், மாவட்டம் முழுவதும் பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வால் நூற்பாலைகள் கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    சலுகைகள் எதிர்பார்ப்பு:-

    இந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் ஜவுளித்துறை தொடர்பான அறிவிப்பில் பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வு கட்டுப்படுத்துவது, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பஞ்சுகளுக்கு வரிவிலக்கு தொடர்பான அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இதுகுறித்து நம்மிடம் பேசிய நெசவுத் தொழிலாளி வள்ளிமயில் கூறியதாவது, இன்று வெளியாகும் பட்ஜெட்டில் ஜவுளித்துறை தொடர்பான அறிவிப்பில் பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் புதிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். மேலும் நலிவடைந்து வரும் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலை மத்திய மாநில அரசுகள் மீட்டெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி