Home /local-news /

அருப்புக்கோட்டை: ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதி குடியரசு தின வாழ்த்து தெரிவித்த பள்ளி மாணவர்கள்

அருப்புக்கோட்டை: ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதி குடியரசு தின வாழ்த்து தெரிவித்த பள்ளி மாணவர்கள்

ஆசிரியர்களுக்கு

ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதி குடியரசு தின வாழ்த்து தெரிவித்த பள்ளி மாணவர்கள்

Aurppukottai News | பள்ளி மாணவர்கள் ரூ.50 பைசா தபால் அட்டையில் தங்கள் கைப்பட எழுதிய குடியரசு தின வாழ்த்தை நண்பர்கள், உறவினர்கள் ஆசிரியர்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே அஞ்சல் தலை பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி மாணவர்கள் குடியரசு தினத்தையொட்டி நண்பர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு தபால் அட்டை மூலம் கடிதம் எழுதி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    தபால் மூலம் குடியரசு தின வாழ்த்து:-

    நாடு முழுவதும் நாளை 73 ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் குடியரசு தினத்தை கொண்டாட முடியாத நிலையில், அருப்புக்கோட்டை நகர் பகுதியை சேர்ந்த 2,5 மற்றும் 9-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் ரூ.50 பைசா தபால் அட்டையில் தங்கள் கைப்பட எழுதிய குடியரசு தின வாழ்த்தை நண்பர்கள், உறவினர்கள் ஆசிரியர்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

    மேலும், குடியரசு தின வாழ்த்து அட்டையில் குடியரசு தினத்தை குறிக்கும் விதமாக மூவர்ண தேசியக்கொடியை வரைந்து, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவையோரின் முகவரிக்கு தபால் அனுப்பி வருகின்றனர். மாணவர்களின் புதிய முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

    கடிதம் எழுதுவதை ஊக்குவிக்க எங்களது சிறிய முயற்சி:-

    இதுகுறித்து நம்மிடம் பேசிய ஒன்பதாம் வகுப்பு மாணவன் பிரதாப் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவன் அஸ்வின் கூறியதாவது, பள்ளி விடுமுறை காரணமாக குடியரசு தினம் கொண்டாட முடியாத நிலையில் தபால் மூலமாக குடியரசு தின வாழ்த்து தெரிவிப்பதால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், ஆண்ட்ராய்டு செல்போன் வருகையால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்களிடையே தபால் பயன்பாடு வெகுவாகக் குறைந்து வருகிறது .அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் எங்களது சிறிய முயற்சி என்றனர்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Vijay R
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி