Home /local-news /

அருப்புக்கோட்டை: மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் மதுரை அணி வெற்றி

அருப்புக்கோட்டை: மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் மதுரை அணி வெற்றி

விருதுநகர்

விருதுநகர் அருகே பொங்கல் பண்டிகையையொட்டி மாபெரும் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 62 க்கும் மேற்பட்ட அண

விருதுநகர் அருகே பொங்கல் பண்டிகையையொட்டி மாபெரும் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 62 க்கும் மேற்பட்ட அண

    விருதுநகர் அருகே பொங்கல் பண்டிகையையொட்டி மாபெரும் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 62 க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபெற்றன. வெற்றி பெற்ற அணிக்கு சுழற்க்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

    62 அணிகள் பங்கேற்பு:-

    பொங்கல் பண்டிகையையொட்டி அருப்புக்கோட்டை ஃபுட்பால் கிளப் மற்றும் அகாடமி சார்பில் 7-ம் ஆண்டு மாபெரும் கால்பந்து போட்டி பொங்கல் நடைபெற்றது. இப்போட்டியில் 23, 19 ,17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் போட்டிகள் நடைபெற்றன. கால்பந்து போட்டியில் மதுரை, சேலம், கிருஷ்ணகிரி, வத்தலகுண்டு, ராமநாதபுரம் தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் இருந்து 62 அணிகள் பங்கேற்றன.

    சுழற்கோப்பை வழங்கி கௌரவிப்பு:-

    23 வயதிற்கான இறுதிப்போட்டியில் குலசேகரநல்லூர் அணியை வீழ்த்தி திண்டுக்கல் அணி கோப்பையை கைப்பற்றியது. அதேபோல் 19 வயதிற்கான இறுதிப் போட்டியில் வத்தலகுண்டு அணியை வீழ்த்தி காரைக்குடி அணி முதலிடம் பிடித்தது. 17 வயதிற்கான இறுதிப்போட்டியில் அருப்புக்கோட்டை அணியை வீழ்த்தி மதுரை அணி வெற்றி பெற்றது.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்க்கோப்பை மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டது. போட்டியை கால்பந்தாட்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்து கண்டு ரசித்தனர்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Vijay R
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி