விருதுநகர் அருகே புதியதாக அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம மக்கள் கடும் எதிர்ப்பு:-
திருச்சுழி தொகுதிக்கு உட்பட்ட பரளச்சி அருகே உள்ள வாகைகுளம் கிராமத்தில் புதியதாக டாஸ்மாக் கடை அமைய உள்ளதாக கூறப்படுகிறது. டாஸ்மார்க் கடை அமைய உள்ள இடத்தில் பள்ளிகள் குடியிருப்புகள் இருப்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரளச்சி மற்றும் வாகைகுளம் கிராமத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் டாஸ்மாக் கடை அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்:-
இந்நிலையில், அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகத்தின் முன்பாக பரளச்சி மற்றும் வாகைகுளம் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, தகவலறிந்து வந்த அருப்புக்கோட்டை தாசில்தார் அறிவழகன் கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் கிராம மக்கள் அளித்த மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.