நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி விருதுநகர் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், ஒரே ஒரு பெண் வேட்பாளர் மட்டும் வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார்.
15 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்:-
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி,விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், ஆகிய நகராட்சிகள் உள்ளன. செட்டியார்பட்டி, காரியாபட்டி மல்லாங்கிணறு, மம்சாபுரம்,எஸ்.கொடிக்குளம், சேத்தூர், சுந்தரபாண்டியம், புதுப்பட்டி, வத்திராயிருப்பு ஆகிய 9 பேரூராட்சிகள் என மொத்தம் 15 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. சிவகாசியில் மாநகராட்சி 48 வார்டுகளும் மற்ற ஐந்து நகராட்சிகளில் 171 வார்டுகளும் உள்ளன.
வேட்புமனு தாக்கல்:-
இந்நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், பெரும்பாலான பகுதிகளில் வேட்பாளர்கள் யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாத நிலையில் , அருப்புக்கோட்டை நகராட்சியில் 18-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் காந்திமதி என்ற பெண் வேட்பாளர் மட்டும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனால், மாவட்டத்திலேயே முதல் ஆளாக அதிமுக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் பெரும்பாலான பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் அலுவலரிடம் தடையில்லா சான்றுகளை சமர்ப்பித்து விருப்ப மனுக்களை ஆர்வமாக பெற்று சென்றனர்.
இதையொட்டி, மாவட்டம் முழுவதும் தேர்தல் நடைபெறும் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி அலுவலகங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.