சிறுபான்மையின மக்கள் சுய தொழில் தொடங்க இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்:-
விருதுநகர் மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினருக்கு மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அமைச்சகம் சார்பில் வழங்கப்படுகிறது.
இலவச தையல் இயந்திரம் பெற வயது வரம்பு 20 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். தையல் கலை பயின்ற சான்று வைத்திருக்க வேண்டும். வருமான உச்சவரம்பு ஆண்டிற்கு ரூபாய் ஒரு லட்சம் இருத்தல் வேண்டும்.
மேலும், தையல் இயந்திரம் பெற தகுதியானவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.