Home /local-news /

ஒரு ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட தம்பதி... ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்!

ஒரு ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட தம்பதி... ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்!

ஒரு

ஒரு குழந்தைக்கு ஆசைப்பட்டவருக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்.. 

Rajapalayam : ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை ஒரு தாய் பெற்றெடுத்துள்ளார். தாயும், குழந்தைகளும் நலமாக உள்ளனர்.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை ஒரு தாய் பெற்றெடுத்துள்ளார். தாயும், குழந்தைகளும் நலமாக உள்ளதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ராஜபாளையம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முருகன் குமார். இவரது மனைவி வீரலட்சுமி வயது (29). ஏற்கனவே இவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். மூன்றாவதாக ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு மீண்டும் வீரலட்சுமி கருவுற்றார்.

    ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் வீரலட்சுமி பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு 3 குழந்தைகள் ஒரே சமயத்தில் அடுத்தடுத்து பிறந்தன. இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது, பிறந்தவுடன் மூன்று குழந்தைகளும் மிகவும் குறைவான எடையில் இருந்ததால், இன்குபேட்டர் கருவியில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து குழந்தை மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள், மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உட்பட செவிலியர்கள் குழுவினர் தீவிர கண்காணிப்புடன் பார்த்துக் கொண்டனர்.

    மூன்று குழந்தைகளையும் நலமுடன் தாயிடம் ஒப்படைத்தனர். ஏற்கனவே இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், தற்போது இரண்டு பெண் குழந்தைகள் சேர்த்து நான்கு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

    அனைவரையும் கடினமாக உழைத்து நன்றாக வளர்ப்பேன் என்று பெற்றோர் உறுதியளித்தனர். தீவிர கண்காணிப்பில் வைத்து சிறப்பாக குழந்தைகளையும், தாயையும் பராமரிப்பு செய்த அரசு மருத்துவர்களை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

    செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Suresh V
    First published:

    Tags: Child, Govt hospital, Virudhunagar

    அடுத்த செய்தி