Home /local-news /

ராஜபாளையம் அருகே 175 டன் மணல், லாரி, பொக்லைன் பறிமுதல்... வட்டாச்சியர் அதிரடி!

ராஜபாளையம் அருகே 175 டன் மணல், லாரி, பொக்லைன் பறிமுதல்... வட்டாச்சியர் அதிரடி!

ஆற்றுமணல்

ஆற்றுமணல் 175 டன் பறிமுதல்! ராஜபாளையம் வட்டாட்சியர் அதிரடி-நடவடிக்கை!           

Rajapalayam : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மேட்டுப்பட்டி பகுதியில் தனியார் காம்பவுண்டு பகுதியில் திருட்டுத்தனமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 175 டன் ஆற்றுமணல் பறிமுதல் செய்யப்பட்டது.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மேட்டுப்பட்டி பகுதியில் தனியார் காம்பவுண்டு பகுதியில் திருட்டுத்தனமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆற்றுமணல் 175 டன் பறிமுதல் செய்யப்பட்டது. சேத்தூர் வருவாய் ஆய்வாளர் புகாரின் பேரில் ராஜபாளையம் வட்டாட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் சேத்தூர், தேவதானம், சுந்தரராஜபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆற்று மணல் திருட்டு தனமாக அள்ளி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரனுக்கு தகவல்கள் கிடைத்தன.

    இதன் பேரில் தீவிர விசாரணை செய்தபோது சேத்தூர் மேட்டுப்பட்டி பகுதியில் கருப்பையா என்ற ராஜா என்பவருக்குச் சொந்தமான காம்பவுண்ட் சுவருக்குள் சுமார் 175 டன் மணல் ஆற்றில் இருந்து திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு வந்து பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    உடனடியாக அதை பறிமுதல் செய்ய வட்டாட்சியர் ராமச்சந்திரன் உத்தரவிட்டார். சேத்தூர் வருவாய் ஆய்வாளர் அமிர்தராஜ் புகாரின்பேரில் சேத்தூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    மேலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆற்று மணல் 175 டன், மணல் அள்ள பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், டிப்பர் லாரி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பின் அதை ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்குள் பறிமுதல் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட மணல் 30 லட்சம் என வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

    செய்தியாளர் : அ. மணிகண்டன், விருதுநகர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Sand, Virudhunagar

    அடுத்த செய்தி