விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கம்பிக்குடி கிராமத்தில் 12 ஆண்டுகளுக்கு பின்பு சுமார் 1,440 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாயில் பிரம்மாண்டமான மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் போட்டி போட்டு மீன் பிடித்து சென்றனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கம்பிக்குடி கிராமத்தில் உள்ள 1,440 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகண்மாயில் இன்று மீன்பிடி திருவிழா பிரமாண்டமாக நடைபெற்றது. அதிக பாசன நீர் நிலைகளை கொண்ட கம்பிக்குடி கண்மாயில் மீன்களை வளர்ப்பதும், நீர் வற்றியதும் மீன்களை பொதுமக்கள் பிடிப்பது என்பது காலங்காலமாக நடந்து வந்துள்ளது.
சுமார் 1,440 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்டமான கம்பிக்குடி கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில் நடைபெற்று வரும் மீன்பிடி திருவிழாவில் மந்திரிஓடை, சின்ன கம்பிக்குடி, பெரிய கம்பிக்குடி, ஆவியூர், ஆலங்குளம், அச்சங்குளம் போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட கிராமமக்கள் ஜாதி, மதம் பாராமல் அனைவரும் ஒன்று கூடி நடைபெறும் மீன்படி திருவிழா கோலகலமாக நடைபெற்றது.
12-ஆண்டுகளுக்கு பின்பு பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது. முதலில் கம்பிக்குடி கிராமத்தில் உள்ள வாழவந்த அம்மன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்றுகூடி சாமி கும்பிட்டு பூஜை செய்து கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறையில் ஊத்தா, வலை, பரி, கச்சா, தூரி ஆகிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர். அதில் ஒவ்வொருத்தர் வலையில் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால், தேன் கெழுத்தி ஆகிய மீன்கள் கிடைத்தன.
குறிப்பாக 5 கிலோ முதல் 10 கிலோ வரை உள்ள பெரிய வகை மீன்கள் கிடைத்தன. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சாதி மத பாகுபாடின்றி மீன் பிடித்த காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.