விருதுநகர் மாவட்டம் பாளையம்பட்டி அருகே சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து சுமார் 10 கிலோ எடையுள்ள ரூபாய் 20,000 மதிப்புடைய புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் பாளையம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தாமரைக் கண்ணன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பாளையம்பட்டி ராஜீவ்நகரில் பலசரக்கு கடை அருகே கையில் பையுடன் சந்தேகப்படும்படியான வகையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்ததில் அவர் அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் (61) என்பதும் பையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து சுமார் 10 கிலோ எடை கொண்ட ரூ 20,000 மதிப்புடைய புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் வைத்திருந்ததாக அன்பழகனை கைது செய்தனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.