Home /local-news /

இன்று அபூர்வ ‘நிழல் இல்லாத நாள்’..  பார்த்து வியந்த பள்ளி மாணவிகள்..

இன்று அபூர்வ ‘நிழல் இல்லாத நாள்’..  பார்த்து வியந்த பள்ளி மாணவிகள்..

students

students

Zero shadow day | நிழல் எந்தப் பக்கமும் சாயாமல் நேராக நமது காலடியில் இருக்கும். செங்குத்தாக நிற்கும் பொருட்களின் நிழல் அதன் அடியிலேயே விழுவதால் நம் கண்களுக்கு அவை தெரியாது அந்த நாளை `நிழலில்லா நாள்’ அல்லது பூஜ்ய நிழல் நாள் என்று கூறுவோம்.

மேலும் படிக்கவும் ...
    வருடத்திற்கு இரு முறை தோன்றும் நிழல் இல்லா நாளானது விழுப்புரத்தில் ஒரு சில நிமிடங்கள் இன்று தோன்றியது. இதனை அரசு பள்ளி மாணவிகள் நிழல் இல்லாமல் இருந்த நிமிடத்தை மாணவர்கள் வட்டமாக நின்று பார்வையிட்டனர்.

    தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் 24-ம்தேதி வரையும் தமிழகத்தின் உள் மாவட்டங்களான,மதுரை,திண்டுக்கல், கோவை, கொடைக்காணல், நாமக்கல் கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிழலில்லா நாள் ஏற்படும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவித்திருந்தது.

    குறிப்பிட்ட நாளில் நண்பகலில் சூரியன் நமது தலைக்கு மேல் இருக்கும் போது நிழல் எந்தப் பக்கமும் சாயாமல் நேராக நமது காலடியில் இருக்கும். செங்குத்தாக நிற்கும் பொருட்களின் நிழல் அதன் அடியிலேயே விழுவதால் நம் கண்களுக்கு அவை தெரியாது அந்த நாளை `நிழலில்லா நாள்’ அல்லது பூஜ்ய நிழல் நாள் என்று கூறுவோம்.

    அதனப்படிடையில் 21ம் தேதியான இன்று தர்மபுரி, சங்கராபுரம், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய இடங்களில் நிழலில்லா நாள் தெரிந்தது. இதனை திருவிக வீதியிலுள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிழலில்லா நாளை மாணவிகளுக்கு தெரிவிக்கும் வகையில் பள்ளி வளாகத்தின் மைதானத்தில் மாணவர்களை வட்டமாக நிற்க வைக்கப்பட்டு நிழலில்லா நாள் காண்பிக்கப்பட்டது. மற்ற மாணவிகளும் இதனை ஆர்வமாக கண்டனர்.

    அதனை தொடர்ந்து மாணவிகளிக்கு நிழலில்லா நாள் எதனால் உருவாகிறது என்பது குறித்து பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளுக்கு எடுத்துரைத்து செயல்முறை விளக்கம் காண்பித்தனர்.

    மேலும் வருடத்திற்கு இருமுறை மட்டுமே நிழலில்லா நாள் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது சரியாகப் விழுப்புரத்தில் நண்பகல்12:11 தோன்றியது.

    இதனை மாணவர்கள் ஆர்வமாக கண்டுகளித்தனர். மேலும் இதன் மூலம் சூரிய ஒளியின் சாய்வுக் கோணத்தையும், பூமியின் ஆரத்தையும் சுற்றளவையும் மாணவிகள் கணக்கிட்டு ஆய்வு செய்து தெரிந்து கொண்டனர்.

    மேலும் இது போன்ற நாட்கள் இலக்கிய காலத்திலேயே பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநல்வாடையில் நக்கீரர் கூறியுள்ளார் என பள்ளி மாணவர்கள் புராணத்தையும், மேலும் இந்த ஜீரோ ஷாடோ குறித்து விவரங்களையும் பள்ளி மாணவிகள் அழகாய் எடுத்துரைத்தனர்.

    மேலும் இந்த நிழல் இல்லா நாளை இன்று பார்க்க முடியாதவர்கள், வருகிற ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சரியாக 12:16 மணியளவில் தோன்றும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எனவே நிழல் இல்லாத அந்த சில நிமிடங்களை கண்டுகளிக்குமாறு கூறியுள்ளனர்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி