Home /local-news /

"பெண்ணை சக தோழியாக பார்த்தாலே குற்றங்கள் குறையும்"-  பெண் காவல் ஆய்வாளர்

"பெண்ணை சக தோழியாக பார்த்தாலே குற்றங்கள் குறையும்"-  பெண் காவல் ஆய்வாளர்

பெண்ணை சக தோழியாக பார்த்தாலே குற்றங்கள் குறையும்

"பெண்ணை சக தோழியாக பார்த்தாலே குற்றங்கள் குறையும்"-  பெண் காவல் ஆய்வாளர்

Villupuram | பெண்களுக்கு எந்த இடத்தில் எந்த பிரச்சனை என்றாலும் இலவச எண் 181 என்ற எண்ணிற்கு அழைத்து தொடர்பு கொண்டு தங்களுக்கு நேர்ந்த பிரச்சினைகளை கூறலாம். இதற்காக எந்நேரமும் காவல் அதிகாரிகள் எப்போதும் இருப்பார்கள்.

    அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!! இன்றைய கால கட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் ஆணுக்கு சமமாகவும், ஆண்களை விட அதிகமாகவும் முன்னேறி வருகின்றனர். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற காலம் போய் தற்போது பெண்கள் பல துறைகளில் சாதித்து வருகின்றனர். அதுபோல ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    பெண்களின் முன்னேற்றத்திற்கு பல தலைவர்களின் போராட்டத்திற்கு பிறகு சுதந்திரம் பெற்று தந்தனர். அதில் மகாகவி பாரதியார் பெண்மையை போற்றுவதை தன் மனைவியிடமிருந்தே தொடங்கினார். “செல்லம்மா எனக்கு சமமாக பக்கத்தில் அமர்ந்து கொள். உடலமைப்பில் மாறுபட்டாலும் ஆணையும், பெண்ணையும் சமமாகவே இறைசக்தி படைத்துள்ளது. எண்ணங்களும், உணர்வுகளும் ஒன்றே ஆகும்” என கூறிப் பெருமைப்படுத்தினார்.

    அதுபோல சிறப்பாக பெண்கள் தங்களுக்கு கிடைத்த சுதந்திரத்தை பயன்படுத்தி மேன் மேலும் முன்னேறி வருகின்றனர். ஆனால் தற்போது தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பல கொடுமைகளும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இது போன்ற குற்றச் சம்பவங்கள் தடுப்பதற்கு பல அமைப்புகளும் சட்டங்களும் போராடி வருகின்றன.

    இதனைப்பற்றி பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி கூறுகையில், தற்போது நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராக பெண்கள் மிகவும் தைரியமாக இருக்க வேண்டும்.

    இலவச எண் 181

    பெண்களுக்கு எந்த இடத்தில் எந்த பிரச்சனை என்றாலும் இலவச எண் 181 என்ற எண்ணிற்கு அழைத்து தொடர்பு கொண்டு தங்களுக்கு நேர்ந்த பிரச்சினைகளை கூறலாம். இதற்காக எந்நேரமும் காவல் அதிகாரிகள் எப்போதும் இருப்பார்கள். பெண்களை தங்கள் வீட்டில் ஒரு உறுப்பினராகவும், சக தோழியாக நினைத்தால் குற்ற சம்பவங்களை நாம் தடுக்கலாம் எனக் கூறினார்.

    பெண்கள் பாதுகாப்பு குறித்து, மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி கூறுகையில், 2021–2022ம் ஆண்டு 156 புகார்கள் வந்துள்ளது. 35 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 60 புகார்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அதில் 24 புகார்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.மேலும் அதிகளவில் மாமனார், மாமியார் சண்டை, பாலியல் தொந்தரவு, குழந்தை திருமணம், சொத்து பிரச்சனைகள் உள்ளிட்ட அனைத்து புகார்களும் தினமும் வருகின்றது.

    குற்ற சம்பவங்களுக்கு எதிராக பெண்களுக்கான உதவி எண் மையம், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முண்டியம்பாக்கத்தில் செயல்படுகின்றது. 2019 முதல் மத்திய அரசால் துவங்கி, 181 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கின்றனர்.

    மேலும் சம்பவங்கள் நடந்த இடத்தில்எங்கள் பணியாளர்கள் உடனே சென்று கார் மூலம் மீட்டு மருத்துவ உதவி, காவல் துறை உதவி, நீதி உதவி, கவுன்சிலிங் வழங்கி மற்றும் உணவு உள்ளிட்டவைகள் செய்துதரப்படுகின்றோம். அதிகளவிலான புகார்கள் எங்களிடம் வருவது என்னவென்றால் ,குழந்தைகள் திருமணம், பாலியல் தொல்லை தான். நாங்கள் இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக பள்ளி மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம்.

    181 மற்றும் 1098 தொடர்பு கொள்ள போஸ்டர், நோட்டீஸ் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். அதுமட்டுமல்லாமல் மொபைல் போன் பேசுவதால் பெண்கள் தவறான வழிக்கு செல்வதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.

    பெண் குழந்தைகள் இரவு 9 மணி வரை மட்டுமே மொபைல் போன்களை கையில் வைத்திருக்க வேண்டும். அதற்குமேல் வைத்திருக்கக்கூடாது எனவும் நாங்கள் பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் நன்றாக பேசுங்கள்.

    பள்ளிகளில் இருந்து வரும் குழந்தைகள் சோர்வாக இருந்தால், மனம்விட்டு பேசுங்கள். மேலும் பெற்றோர்கள் குழந்தை திருமணங்களை தவிர்ப்பதால், பல அரசு உதவிகளை பெறலாம் . தமிழக அரசின் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்திட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம்.

    பெண் சிசு கொலையை ஒழிக்க மத்திய அரசு பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை கற்பிப்போம் என்ற திட்டம் உள்ளது. அந்த திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம். மேலும் சமுதாயத்தில் பெண்கள் படித்தால் தான் முன்னேறலாம்.

    படிக்க முடியாத பெண்கள் தங்களுக்கு தெரிந்த கலைகளில் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். மகளிர் தினமான இன்று குடும்ப பிரச்சனை தொடர்பாக ஒரு புகாரும், மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பஸ் நிலையத்தில் இருந்ததாக ஒரு புகாரும், உறவினர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்வதாக ஒரு புகாரும் என மொத்தம் 3 புகார்கள் வந்தது என கூறினார்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: International Women's Day, Villupuram

    அடுத்த செய்தி