Home /local-news /

தரமற்ற விக்கிரவாண்டி உணவகங்களை சீல் வைக்காதது ஏன்? அதிகாரிகள் விளக்கம்

தரமற்ற விக்கிரவாண்டி உணவகங்களை சீல் வைக்காதது ஏன்? அதிகாரிகள் விளக்கம்

தரமற்ற விக்கிரவாண்டி உணவகங்களை சீல் வைக்காதது ஏன்? அதிகாரிகள் விளக்கம்

தரமற்ற விக்கிரவாண்டி உணவகங்களை சீல் வைக்காதது ஏன்? அதிகாரிகள் விளக்கம்

Villupuram News | தரமற்ற ஐந்து உணவகங்கள்மீதும் நடவடிக்கை எடுக்காமல், பேருந்தை நிறுத்தாமல் செல்வதுமட்டும்சரியான நடவடிக்கையா? என்று பொதுமக்கள் கேள்வி.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சென்னைதிருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில், 35 நெடுஞ்சாலை உணவகங்கள் உள்ளன.
    இதில், விக்கிரவாண்டி டோல் கேட்டில் இருந்து திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் வரை 7 உணவகங்களில் அரசு பேருந்துகள் நிறுத்த அரசு அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஓட்டல்களில் தரமற்ற உணவுகள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

    இதனைத் தொடர்ந்து, டி.ஓ. எனப்படும் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையிலான எஃப்.எஸ்.ஓக்கள்( உணவு பாதுகாப்பு அதிகாரிகள்) தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் அதிரடி ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் அடிப்படையில் அரசுக்கு அறிக்கை அனுப்பினர். இந்நிலையில், விக்கிரவாண்டி அருகே அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா மற்றும் அரிஸ்டோ ஆகிய ஐந்து உணவகங்களில் அரசு பேருந்துகள் உணவிற்காக நிறுத்துவதற்கு தடை விதித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

    ஆனால், தரமற்ற ஐந்து உணவகங்கள்மீதும் நடவடிக்கை எடுக்காமல், பேருந்தை நிறுத்தாமல் செல்வதுமட்டும்சரியான நடவடிக்கையா? என்று பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழும்பிக்கொண்டிருக்கும் சூழலில்,இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் நாம் விசாரித்தோம். "புகாரின் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் ஆய்வு செய்தோம்.

    அப்போது, விற்கப்படும் உணவுப்பொருட்களின் விலைப்பட்டியல் ஒட்டப்படவில்லை. திண்பண்டங்களில் எம்.ஆர்.பி. (Maximum Retail Price) விலை, பொருட்கள் தயாரிக்கப்பட்டது மற்றும் காலாவதி ஆகும் தேதி ஆகியவற்றை குறிப்பிட அறிவுறுத்தினோம். மேலும், கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்கவும் கூறினோம்.

    இதேபோன்று, அனைத்து ஓட்டல்களிலும் புகார் தெரிவிக்க 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண் அச்சிட்ட ஸ்டிக்கரை ஒட்டினோம்.
    அதன்மூலம், பேருந்து பயணிகளிடம் இருந்து தினந்தோறும் ஐந்து புகார்கள் வந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் ஆய்வு செய்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியுள்ளோம். ஒரு குறையை சரிசெய்ய இரண்டு முறை நோட்டீஸ் வழங்கப்படும்.

    அப்படியும் சரிசெய்யவில்லை என்றால்தான் உணவகங்களுக்கு அபராதம் விதித்து, சீல் வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதனால், இந்த உணவகங்களுக்கு சீல் வைக்கப்படவில்லை. தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஓட்டல்களில் வாரந்தோறும் ஆய்வு செய்து வருகின்றோம்" என்றார்கள்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Vijay R
    First published:

    அடுத்த செய்தி