தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மக்களின் தாகத்தை தீர்ப்பதற்கு வெள்ளரிப்பிஞ்சு அதிகளவில் பொதுமக்கள் நாடி செல்கின்றனர். இந்த வெள்ளரியில் நீர் சத்துக்கள் நிறைந்து உள்ளதால், பொதுமக்கள் அதிகளவில் வெள்ளரிப் பிஞ்சுகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதுபோல, விழுப்புரம் அடுத்த பில்லூர், பானாம்பட்டு, ஆனங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தங்களுடைய விளைநிலங்களில் வெள்ளரி சாகுபடி செய்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் பயிர் செய்த வெள்ளரிச்செடிகள், தற்போது பூ விட்டு வளர்ந்து வருகின்றன.இந்தாண்டு நன்கு விளைச்சல் கிடைத்து வருவதால், விழுப்புரத்தைச் சுற்றி வெள்ளரி செடி பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒரு கிலோ 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனையாகிறன. ஒரு வெள்ளரி பிஞ்சு 3 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்கிறோம் என்கின்றனர் விவசாயிகள்.
இது குறித்து அப்பகுதி விவசாயி கன்னியப்பன் கூறுகையில், கடந்தாண்டு பருவமழை பெய்யாததால், விளைச்சல் பாதிக்கப்பட்டது. ஆனால் சென்ற ஆண்டுகளை விட இந்தாண்டு வெள்ளரி சாகுபடி நல்ல முறையில் விளைந்து, எங்களுக்கு லாபம் கிடைக்கிறது.
பூச்சி தாக்கம் இருந்தாலும் நாங்கள், தோட்டக்கலை துறையை நாடி, அவர் கூறும் அறிவுரைகளை கேட்டு அதன்படி நடந்து கொள்கிறோம். இதனால் எங்களுக்கு அதிக மகசூல் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு வெள்ளரிப்பிஞ்சு அமோக விளைச்சலால் அதிக லாபம் கிடைத்துள்ளது என மகிழ்ச்சியுடன் கூறினார்.
மேலும், இந்த வெள்ளரிப் பிஞ்சுகளை, சுற்றுப்பகுதியில் உள்ள சிறு தொழில் வியாபாரிகள், வாங்கிச் சென்று, சாலையோரம், ஆங்காங்கே கடை வைத்து விற்பனை செய்து லாபம் பார்த்து வருகின்றனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.