விழுப்புரம்: மாநில அளவில் மல்லர் கம்பத்தில் மூன்றாம் இடம்பிடிக்கவைத்த இளைஞர்!
தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றுதான் மல்லர் கம்பம். இவ்விளையாட்டு தற்போது அழிந்து போகும் நிலையில் உள்ளது. ஒரு சில மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பொதுமக்கள் இந்த கலையை மீட்டெடுக்கும் வகையில் தங்களுக்கு தெரிந்த சிறுவர் சிறுமிகளுக்கு கற்றுத்தருகிறார்கள்.
விழுப்புரம் வண்டி மேடு வடிவேல் நகரைச் சேர்ந்த செல்வம் மொழியன் என்ற இளைஞர்
‘ஹாப்பி மால்கம்’ என்ற பெயரில் 50-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களை கொண்டு மல்லர் கம்பம் பயிற்சி அளித்து வருகிறார். மேலும், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, ராம்நாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச்சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மல்லர் கம்பம் பயிற்சி அளித்துவருகிறார்.
அதுபோல, இவர் விழுப்புரத்தில் சிந்தாமணி, முட்டத்தூர், வண்டி மேடு போன்ற பகுதிகளில் மல்லர் கம்பத்தை இலவசமாக மாணவர்களுக்கு கற்றுத் தருகிறார்.இதனைக் கவனித்த அப்பகுதி மக்களும் தங்களுடைய பிள்ளைகளை இந்த கலையை தெரிந்து கொள்ள ஆர்வமாக அனுப்பிவைக்கிறார்கள்.
ஆனால், இந்த கலையை முழுமையாக கற்றுக்கொள்ள அவர்களிடம் போதிய இடவசதி மற்றும் பொருட்கள் வசதியில்லாததால், மல்லர் கம்பத்தில் புதிய முறைகளை கற்றுத்தர முடியவில்லை.
அதனால், தற்போதுள்ள இட வசதியை பயன்படுத்தி, இங்கு பயின்ற மாணவர்கள் சென்னையில் 08.01.22 அன்று செங்கல்பட்டு மாவட்டம் நடத்திய மல்லர் கம்பம் போட்டியில்
மாநில அளவில் பெண்கள் பிரிவிலும் ஆண்கள் பிரிவிலும் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.
இங்கு பயிலும் மாணவர்கள் தங்களுக்கு போதிய வசதி, உபகரண வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தந்தால் தாங்கள் முதல் இடத்தைப் பிடிக்கும் அளவிற்கு செல்வோம் என நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.