கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில், காலையிலேயே வெயில் சுள்ளென்று அடிக்கத் தொடங்கிவிட்டது.சாலையில் நடமாட முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர் .பொதுமக்கள் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அதிக நீர்ச்சத்துள்ள பழங்களை வாங்கி சாப்பிட்டு வெயிலின் தாக்கத்தை குறைத்து கொள்கின்றனர். விற்பனையாகும் பழங்களில் முக்கிய பழம் தர்பூசணி தான். இந்த பழத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிடுகிறார்கள்.
அதுபோல, விழுப்புரத்தில் காந்தி சிலை அருகே வியாபாரிகள் தர்பூசணி பழங்களை விற்க ஆரம்பித்துள்ளனர். இந்தப் பகுதியில் பள்ளிக்கூடங்கள், பழைய பேருந்து நிலையம் இருப்பதால் பொதுமக்கள் அதிகளவில் வந்து போகும் சாலை ஆக இருப்பதால், பொதுமக்கள், மாணவர்கள் அதிகளவில் தர்பூசணி பழங்களை வாங்கி சாப்பிடுகிறார்கள் .
காலையிலிருந்து இரவு வரை தர்பூசணி பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பீஸ் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும் கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கோடை காலத்தின் தொடக்கமாக இருப்பதால், விற்பனை மெதுவாக தான் ஆரம்பம் ஆகி இருக்கிறது போகப் போக விற்பனை இன்னும் சூடு பிடிக்க ஆரம்பிக்கும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.
மேலும் விழுப்புரத்தில் மரக்காணம், முருக்கேரி, வேப்பஞ்சேரி, திண்டிவனம் போன்ற பல பகுதிகளிலிருந்து தர்பூசணி பழங்களை கொள்முதல் செய்து, லாரி மூலமாக மொத்தமாக விழுப்புரத்துக்கு எடுத்துவந்து சில்லறையாக வியாபாரம் செய்து வருகிறார்கள் வியாபாரிகள்.
பொதுமக்களும் இந்த பழங்களை வாங்க ஆர்வமாக வருவதால், வியாபாரம் நல்ல முறையில் நடக்கிறது என மகிழ்ச்சியாக கூறுகிறார்கள் வியாபாரிகள்.
செய்தியாளார் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.