விழுப்புரம் : நகர்புற உள்ளாட்சித் தேர்தல்- பாட்டுப் பாடி விழிப்புணர்வு
நகராட்சி உள்ளாட்சி தேர்தல் மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வுகளை செய்து வருகிறது. விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆணைப்படி முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணா பிரியா வழிகாட்டுதலின்படி, நகராட்சி உள்ளாட்சி தேர்தல் குறித்த விழிப்புணர்வு விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில், எனது வாக்கு எனது உரிமை, 100% வாக்களிக்க வேண்டும், என் வாக்கு விற்பனைக்கு அல்ல என விழுப்புரம் அரசு பள்ளி ஆசிரியர்கள் பாட்டுப் பாடி பொதுமக்களிடம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு பிரச்சாரத்தின்போது முதலில் வாக்குகள் பற்றிய விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். அதன்பின்பு, சிக்னலில் நின்ற பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள். மேலும் எனது வாக்கு எனது உரிமை, 100 சதவீதம் வாக்களிப்போம் என கையில் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
அதுமட்டுமல்லாமல், வாக்கு குறித்த விழுப்புணர்வு பாடல்களைப் பாடியவாறு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர். அய்யாமாரே!!! அம்மாமாரே!!! வாக்களிக்க வாங்க, நம்மளோட ஓட்டு போடணுமுங்க என இசைக்கருவி இசைத்தும் பாட்டு பாடியும் பொது மக்களிடம் வாக்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களான ரத்தின மணி, ஹேமலதா, தமிழகன், சரசு, சின்னப்ப ராஜ், அருள்தாஸ், ரவீந்திரன், ஜெயராணி ஆகிய ஆகியோர் இந்த விழிப்புணர்வில் பங்கேற்றனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.