விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் படியில் தொங்கியபடி பயணம் செய்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து கவனித்து வரும் போக்குவரத்து காவல்துறையினர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி, இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதேபோல இலகுரக வாகனங்களிலும் அதிக நபர்களை ஏற்றி வரக்கூடாது எனவும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
இதனை அடுத்து, விக்கிரவாண்டி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் குமாரராஜா மற்றும் காவல் துறையினர்,பனையபுரம் கூட்ரோட்டில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த இலகு ரக வாகனத்தில் (டாடா ஏசி ) ஆபத்தான முறையில் 45க்கும் மேற்பட்ட நபர்களை ஏற்றிவந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வாகனத்தை மடக்கிய உதவி ஆய்வாளர் குமாரராஜா மற்றும் போலீசார் அதில் பயணம் செய்த பொதுமக்களை கீழே இறக்கிவிட்டனர்.
இதை தொடர்ந்து, விழுப்புரம் வரை செல்வதற்கு மாற்று வாகனம் ஏற்பாடு செய்து பொதுமக்களை அனுப்பி வைத்தனர்.
பின்னர், இலகுரக வாகனத்தில் பொதுமக்களை ஏற்றிச்செல்லக்கூடாது என ஓட்டுநருக்கு சாலை விதிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், விதிமுறை மீறி பொதுமக்களை ஏற்றிவந்ததால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.