Home /local-news /

விழுப்புரம் டூ அமெரிக்கா- கலைத்திறமையை ஏற்றுமதி செய்யும் பெண்!

விழுப்புரம் டூ அமெரிக்கா- கலைத்திறமையை ஏற்றுமதி செய்யும் பெண்!

Villupuram

Villupuram to America- the woman exports artistic talent!

விழுப்புரத்தைச் சேர்ந்த ஷகீலா ஃபரூக் என்ற பெண் தன் சிறு வயதில் இருந்து, மண்பாண்ட தொழிலில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். அந்த ஆர்வமே வெளிநாடுகள் வரை அவர் தயாரிக்கும் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் அளவிற்கு முன்னேற வைத்துள்ளது.

    விழுப்புரம் டூ அமெரிக்கா- கலைத்திறமையை ஏற்றுமதி செய்யும் பெண்!

    விழுப்புரத்தைச் சேர்ந்த ஷகீலா ஃபரூக் என்ற பெண் தன் சிறு வயதில் இருந்து, மண்பாண்ட தொழிலில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். அந்த ஆர்வமே வெளிநாடுகள் வரை அவர் தயாரிக்கும் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் அளவிற்கு முன்னேற வைத்துள்ளது.

    உழைப்பாலும் திறமையாலும் தன் மண்பாண்ட பிசினஸில் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறார் ஷகீலா.

    விழுப்புரம் அடுத்து முண்டியம்பாக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ஷகிலாவின் ’ஷபானா ஆர்ட் பாட்டரீஸ்’என்ற கடை. இவர், முதலில் தொழில் தொடங்குவதற்கு அரசாங்கம் மூலம் வங்கி கடன் பெற்று தொழில் ஆரம்பித்தார். தற்போது, மற்ற பெண்மணிகளுக்கு வேலை தரும் தகுதியில் உள்ளார் ஷகீலா ஃபரூக்.
    பெண்களுக்கு குயவுத் தொழிலைக் கற்றுக் கொடுத்து மண்ணை, கலையாக்கி பொன்னாக்கும் தொழில் முனைவோர்களை உருவாக்குகிறார்.

    இங்கு 80% சதவீதம் பெண்களை கொண்டு தான் வேலை நடக்கிறது. குறைந்த அளவில் ஆண்களும் வேலையில் உள்ளார்கள். இங்கு தயாரிக்கபடும் அனைத்து பொருட்களும் 90% சதவீதம் கையால் செய்யப்படும் கைவினைப்பொருட்களாகும். மேலும் பீங்கானை கொண்டும் அலங்கார பொருட்கள் செய்யப்படுகிறது.

    கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம், கலையில் ஏதாவது சாதிக்க துடிக்கும் பெண்கள், எந்த வேலைக்கும் போக வழி இல்லாமல் தவிக்கும் பெண்கள், மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட பெண்கள் என அனைவருக்கும் இந்த தொழிலை கற்றுக் கொடுத்து இதில் எப்படி சாதிக்க வேண்டும் என அனைத்து வழிகளை செய்கிறார்.

    அரசாங்கத்திடம் வங்கிக் கடன், மானியம் வாங்குவது குறித்த விழிப்புணர்வையும் செய்கிறார். நல்ல தொழில் முனைவோர்களை உருவாக்குவதே நோக்கம் என கூறுகிறார். எங்க வீட்டுக்கு தேவைப்படும் அலங்காரப்பொருட்கள், பூஜை பொருட்கள், பூ ஜாடிகள், அலங்காரக் கூடைகள் என அனைத்து பொருட்களையும் களிமண்ணால் செய்து, பின்னர் அதற்கு வண்ணமும், டிசைன்களும் செய்யப்படுகிறது.

    தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், கனடா போன்ற பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒருசிலர் இவர்களிடம் பொருட்களை வாங்கி, தனியாக விற்பனை செய்து வருகிறார்கள்.இங்கு தயாரிக்கப்படும் பொருட்களின் ஆரம்ப விலை 10 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.

    இப்படி பல தொழில் முனைவோர்களை உருவாக்கி, கலைத்துறையில் சாதிக்க வேண்டுமென பெண்களுக்கு உறுதுணையாக நிற்கிறார் ஷகீலா.


    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Manosoundar M
    First published:

    அடுத்த செய்தி