விழுப்புரம்: ஊரடங்கை மாணவர்களுக்கு பயனுள்ளதாக மாற்ற இப்படியும் செய்த இளைஞர்
உலகளவில் இசை கருவிகள் முதல் நடன கலைகள் வரை தமிழர் கலாச்சார கலைகள் இன்றளவும் தனித்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அவ்வாறான தமிழர் பாரம்பரிய கலைகள் மெல்ல மெல்ல அழிந்து வரும் நிலையில் உள்ளது. அவற்றை காத்திடவும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று காலச்சார கலைகள் காலமடைந்துவிடாமல் பாதுக்காக்கும் முயற்சியில் தற்போது உள்ள இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் கப்பூர் கிராமத்தைச் சேர்ந்த அன்பரசன் என்ற இளைஞர், பள்ளி பருவதில் இருந்து கலை மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். அதிலும் தமிழர் பாரம்பரிய கலைகளான பறை இசை, தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பம் உள்ளிட்ட தமழ் கலாச்சாரமிக்க கலைகள் பயின்று வந்துள்ளார்.விழுப்புரம் அடுத்து மூங்கில்பட்டு என்ற கிராமத்தில், தான் கற்ற கலையை இளைஞர்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கு கற்றுக்கொடுக்க தொடங்கினார்.
கிராமிய கலைக் குழு மற்றும் அன்பு கல்வி பயிற்சி மையம் என்பதை உருவாக்கி பல்வேறு கிராமங்களில் நடத்தி கல்வியோடு கலையையும் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை இசைவோடு செய்து வருகிறார்.
விழுப்புரம் சுற்றியுள்ள பகுதிகளான வளவனூர், செங்காடு, இளங்காடு, குமாரகுப்பம் , கல்லிப்பட்டு உள்ளிட்ட 10 க்கும் மேற்ப்பட்ட கிராம பகுதிகளுக்கு சென்று தன் குழுவோடு சென்று காலை, மாலை என் இரு வேளையும், பாரம்பரிய கலைகளான பறை, ஒயில் ஆட்டம் கரகாட்டம், கும்மியாட்டம் கழியலாட்டம், செடி குச்சி ஆட்டம், பெரிய கோலாட்டம் மயில் ஆட்டம், மாடு ஆட்டம், மான் கொம்பாட்டம் போன்ற பல்வேறு நடன கலைகளை கற்றுத் தருகிறார்.
”கொரோனா எனும் பெருந்தொற்று காரணமாக இம்மாணவர்கள் வழிதவறி பல்வேறு செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஒருங்கிணைத்து நல்ல எண்ணங்களை ஊக்குவிக்கவேண்டும். மனதையும் உடலையும் ஒன்றுபடுத்தி உறுதியாக்க வேண்டும் என்பதே நோக்கம். கலையும் கல்வியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்” என்றும் கூறுகிறார்.இந்த கலைகளை அடுத்த தலைமுறைக்கு அடையாளம் காட்டி கற்பிப்பதோடு அடுத்த கலைஞர்களை உருவாக்குவதன் மூலம் பாரம்பரியம் அழியாமல் இருக்க ஒரு ஊந்துகோளாக திகழ்வதில் மகிழ்ச்சியளிப்பதாக கூறுகிறார் இந்தக் கலைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அன்பரசு.
மேலும் இந்த கலைக்குழு பயிற்சியில் சிறுவர்-சிறுமிகள் இளைஞர்கள் ஆர்வமாக வந்து அவர்களுக்கு எந்த கலையில் ஆர்வம் இருக்கிறதோ அதனை கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கும் கற்றுத்தருகிறார்கள்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.