Home /local-news /

விழுப்புரம் : அரியவகை ஆமை குஞ்சுகளை கடலில் விட்ட வனத்துறை

விழுப்புரம் : அரியவகை ஆமை குஞ்சுகளை கடலில் விட்ட வனத்துறை

Villupuram:

Villupuram: The forest department has released rare turtle into the sea

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள கடலில் வனத்துறை அதிகாரிகள் மூலம்   அரிய வகை ஆமை குஞ்சுகள் விடப்பட்டது.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள கடலில் வனத்துறை அதிகாரிகள் மூலம் அரிய வகை ஆமை குஞ்சுகள் விடப்பட்டது.

    இந்தியாவில் காணப்படும் கடல் ஆமை இனங்களில், ஆலிவ் ரிட்லி வகையிலான ஆமைகள் மிகவும் அபூர்வமானதாக கருதப்படுகிறது. இந்திய ஆழ்கடல் பகுதியில் வசிக்கக்கூடிய இந்த ஆபூர்வ வகையிலான ஆலிவ் ரிட்லி ஆமைகள் எந்த இடத்தில் பிறக்கின்றனவோ, அங்கேதான் முட்டைகளை இடும். இந்தியாவைப் பொறுத்தவரை தமிழகம் மற்றும் ஓடிசா மாநிலக் கரையோரங்களில் அதிகளவில் முட்டையிட்டு வருகின்றன.

    இந்த ஆமைகள் ஆண்டுத்தோறும் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை சுமார் 5 மாத காலத்திற்கு தமிழக கடற்கரையோரம் உள்ள பகுதிகளுக்கு வருகை புரியும். இந்த ஆமை மணல் பரப்புகளில் பள்ளம் தோண்டி முட்டையிட்டு விட்டு, மீண்டும் கடலுக்குள் சென்றுவிடுகிறது.

    இந்த முட்டைகளை எடுத்து சென்று பாதுகாத்து , குஞ்சு பொறித்த உடன் அந்த ஆமைக் குஞ்சுகளை கடலில் விடுவதை வனத்துறையினர், சில தன்னார்வலர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    அதுபோல விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கடற்கரை பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் தேதி முதல் நேற்று (24.02.22) தேதி வரை சுமார் 10,148 ஆமை முட்டைகளையும் வனத்துறை சேகரித்து வசவன்குப்பம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக அறையில்( முட்டை பொரிப்பகம் ) வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

    இந்நிலையில் வனத்துறையினர் சேகரித்து வைத்திருந்த முட்டைகளில் இருந்து 125 ஆமைக்குஞ்சுகள் பிறந்துள்ளது.மேலும் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் இன்னும் சில முட்டைகள் பொரிந்து மொத்தமாக 598 குஞ்சுகள் உள்ளன.

    இதனையடுத்து மரக்காணம் அருகே நாரவாக்கம் என்ற இடத்தில் உள்ள கடலில் ஆமைக் குஞ்சுகளை விடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
    திண்டிவனம் வனச்சரக அலுவலர் பெருமாள் தலைமையில் வனத்துறையினர், பிறந்த ஒரு நாளே ஆன ஆமைக் குஞ்சுகளை கூடையில் வைத்து எடுத்து சென்று கடற்கரையோரம் உள்ள மணலில் விட்டனர்.

    அப்போது ஆமைக் குஞ்சுகள், கடற்கரை மணலில் மெதுவாக, அதனுடைய அழகிய நடை போட்டுக்கொண்டு கடலுக்குள் சென்றது.
    ஆமைக் குஞ்சுகள் கூட்டமாக ஒரே நேரத்தில் தவழ்ந்து கடலுக்குள் சென்ற காட்சிகள் காண்போரை, கண் இமைக்காமல் பார்க்க வைத்தது. மேலும் அழிவின் விளம்பில் உள்ள அபூர்வ வகையிலான ஆலிவ் ரிட்லி ஆமைகளின் இனப்பெருக்கம் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    மேலும், இதுபோன்ற அரிய வகை ஆமைகளை வனத் துறையினர் பாதுகாத்து வருவது அப்பகுதியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வனத்துறையினர் அந்த ஆமைக் குஞ்சுகளை பாதுகாத்து வருகின்றனர்.


    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி