தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றானது கபடி போட்டி. இந்த விளையாட்டு கிராமப்புறங்களில் தொடங்கி நகர்ப்புறத்திற்கும் சென்றுள்ளது.
இவ்விளையாட்டு மக்களிடத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது . ஆரம்ப காலகட்டங்களில் ஆண்கள் மட்டுமே விளையாடி வந்த கபடி போட்டியில் பெண்களும் கால்தடம் பதித்து சாதிக்க துவங்கினர். பல மாவட்டங்களில் கபடி போட்டி நடைபெற்று வருகிறது.
அதுபோல விழுப்புரம் மாவட்டம் பில்லூர் கிராமத்தில் வெளிச்சம் இலவச கல்வி, விளையாட்டு பயிற்சி மையம் மற்றும் கிராம இளைஞர்கள், பொதுமக்கள் இணைந்து மாநில அளவிலான பெண்களுக்கான கபடி போட்டி நடத்தினர்.
இந்த போட்டியில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் இருந்து 30க்கும் மேற்பட்ட பெண்கள் கபடி அணி கலந்து கொண்டனர். மாநில அளவிலான கபடி போட்டி என நாட்கள் நடைபெற்றது.
அனைத்து பெண்கள் அணியினரும், ஒவ்வொரு குழுக்களும் தனி திறமையை வெளிப்படுத்தி வந்தனர். ஒவ்வொரு அணியும் பல கட்டங்களைத் தாண்டி இறுதி விளையாட்டிற்கு நான்கு அணிகள் தேர்வாகி வெற்றி வாகை சூடியது.
போட்டியின் இறுதியில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பீனிக்ஸ் பறவை என்ற அணி முதல் இடத்தை பிடித்தது. இந்த அணிக்கு வெற்றிக் கோப்பையும், 10,000 ரூபாயும் வழங்கப்பட்டது.
இரண்டாம் இடத்தைப் பவிழுப்புரம் மாவட்ட செங்காந்தள் கபடி குழு வென்றது. இக்குழுவுக்கு 8,000 ரூபாயும் வெற்றிக் கோப்பையும் வழங்கப்பட்டது.
மூன்றாவது இடத்தை இரண்டு அணிகள் பிடித்துள்ளது. ஒரு அணி திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தீபம் கல்கி அணியும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கள்ளக்குறிச்சி TGM என்ற குழுவும் பிடித்துள்ளது. இந்த இரண்டு குழுவுக்கும் 5,000 ரூபாய் வழங்கப்பட்டது.
வெற்றி வாகை சூடிய அணிவித்து பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.மற்ற அணிகள் அடுத்து வரும் போட்டிக்கு ஆயத்தமாகும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.