விழுப்புரம்: மேல்வாலை கிராமத்தில் 6 தெய்வங்களும் ஒரிடத்தில் காட்சி தந்து அருள்பாவிக்கும் ஸ்ரீ மஹாகாளி கோவிலில், மூன்றாம் ஆண்டு மயானக்கொள்ளை உற்சவத்திருவிழா இன்று நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் மேல்வாலை கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மஹாகாளியின் மயான கொள்ளை உற்சவ திருவிழாவில் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு இணங்க அம்மன், குறத்தி போல வேடமிட்டு வீதியுலா வலம் வந்து தங்களது வேண்டுதல்களை காளிக்கு சமர்ப்பணம் செய்தனர்.
அதன்பின் விளக்கு பூஜைக்காக வேண்டுதல் பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.ஸ்ரீமஹாகாளிக்கு வேண்டுதல்களுடன்அபிஷேக, ஆராதனைகள்மிக சிறப்பாக நடைபெற்றது.
இறுதியாக, வான்நோக்கி வீசும் பொருட்களை மடியேந்தி பெற்றுக் கொண்டால் குழந்தையின்மை கஷ்டங்கள் அனைத்தும் பறந்து ஓடும் என்ற ஐதீகத்தின்படி, அம்மனுக்கு உகந்த பொருட்களுடன் ஊர்மக்கள் ஒன்றுகூடி வான்நோக்கி சூரையிட்டும், சூரையிட்ட பொருட்களை அந்த காளியே நமக்கு மேலிருந்து தருவதாக எண்ணி மடியேந்தி பக்தர்கள் பெற்றுக் கொண்டனர்.
இந்த ஸ்ரீ மயான காளியம்மன் 3- ம் ஆண்டு மயானக் கொள்ளை உற்சவம் திருவிழாவானது, ஒரே இடத்தில் கூடும் 6 தெய்வங்களான மயான காளி, கன்னியம்மாள், எல்லைப்பிடாரி, அக்னி வீரன், முனீஸ்வரன் வனகாளி ஆகிய ஆறு தெய்வங்களும் ஒரே இடத்தில் காட்சி தந்து மக்களுக்கு வேண்டிய செல்வங்களை கொடுத்து அவர்களது உயிர்,உடமைகளை பாதுகாத்து வரும் அதிசயமான கோவில் வீற்றிருக்கும் ஸ்ரீ மயான காளியின் மாயானக் கொள்ளை உற்சவ திருவிழாவில் ஏராளமான பக்தர்கள்,பக்தியோடு கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.