Home /local-news /

அம்பேத்கர் பிறந்தநாள் பேச்சுப்போட்டி.. வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு - முழு விவரம்..

அம்பேத்கர் பிறந்தநாள் பேச்சுப்போட்டி.. வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு - முழு விவரம்..

பேச்சுப்போட்டி

பேச்சுப்போட்டி

Villupuram | அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 19.04.2022 அன்று நடைபெற உள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி

    தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர்,தந்தை பெரியார், பேரிறஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகிய தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

    அதுபோல,விழுப்புரம் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 19.04.2022 அன்று நடைபெற உள்ளது. இதில் பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 10.00 மணிக்கு தொடங்கவுள்ளது.

    இந்தப் பேச்சுப் போட்டியில்,கல்லூரி- பள்ளி மாணவர்கள் பங்குபெற்று வெற்றி பெறவேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெற்றி பெறுபவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக 5,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக
    3,000 ரூபாயும்,மூன்றாம் பரிசாக 2,000 ரூபாயும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

    மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாக 2,000 ரூபாய் வீதம் வழங்கப்பெறவுள்ளது. மேலும், 24,000 ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் பொருட்களும் வழங்கப்பெற உள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ - மாணவிகள் இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்த போட்டி பற்றிய கூடுதல் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,விழுப்புரம் என்ற முகவரியைத் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி