Home /local-news /

மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி வருமானத்தை உயர்த்த அருமையான வாய்ப்பு

மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி வருமானத்தை உயர்த்த அருமையான வாய்ப்பு

Women Self Help Groups

Women Self Help Groups

Villupuram | விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, மாநில அளவில் நடைபெறும் விற்பனை கண்காட்சியில் காட்சிப்படுத்தலாம்.

    மகளிர் சுய உதவிக்குழுக்களில் இடம் பெற்றுள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வாதரத்தை உயர்த்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்திட ஏதுவாக 2022-2023ம் ஆண்டில் கோடை கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநில அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களின் மாபெறும் விற்பனை கண்காட்சி வருகிற ஏப்ரல் 2022 மாதத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடைபெற உள்ளது.

    மாநில அளவில் நடைபெற உள்ள இக்கண்காட்சி ஏப்ரல் 2022 முதல் மே 2022 வரை “சித்திரை கொண்டாட்டம்” என்கிற பெயரில் நடைபெறயுள்ளது.

    சுய உதவி குழுக்களில் உற்பத்தி செய்யப்படும் கண்கவர் கைவிணைப்பொருட்கள், மண்பாண்ட பொருட்கள்என்ன, பனை பொருட்கள், ஆடை ஆபரணங்கள்,பாரம்பரிய உணவுப்பொருட்கள் போன்ற பல்வேறு பொருட்கள் இடம் பெறுவதோடு, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியே அரங்குகள் ஒதுக்கப்பட்டு பொது மக்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் கண்காட்சி மாநில அளவில் நடைபெற உள்ளது.

    எனவே விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, மேற்படி மாநில அளவில் நடைபெறும் விற்பனை கண்காட்சியில் காட்சிப்படுத்தலாம்.
    இக்கண்காட்சியில் பங்குபெறுவதற்காக எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. முற்றிலும் இலவசமாக பங்கேற்கலாம்.

    இக்கண்காட்சியில் பங்கேற்க உள்ள உதவிக்குழுக்கள் விழுப்புரம் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொண்டு மாநில அளவில் நடைபெறும் கண்காட்சியில் கலந்து கொள்ளவதற்கு பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் பல தகவல்கள் அறிந்து கொள்ள, 04146-223736 மற்றும் 944409479 தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி