விழுப்புரம்: மீண்டும் பள்ளிக்கு போகலாம்- சுத்தம் செய்யும் பணி தீவிரம்
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்விழுப்புரம்: மீண்டும் பள்ளிக்குலூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில், படிப்படியாக தொற்று குறைந்து வரும் காரணத்தால் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்ட நிலையில், தற்போது 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 1 மற்றும் 12 ஆம் வகுப்புவரை அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்பு நடத்தவும், அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்ட நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் ஆன்லைனில் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் அடுத்த கட்டமாக மாணவர்களுக்கு எந்த ஒரு நோய்த் தொற்றும் பரவக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து வகுப்பறைகள், சுற்று சுவர்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியிலும், சுத்தம் செய்யும் பணியிலும் கல்வி வளாகத்தை சுத்தம் செய்வது உள்ளிட்ட செயல்களிலும் அரசும் பள்ளி நிர்வாகங்களும் முழு மூச்சுடன் இறங்கியுள்ளன.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.