விழுப்புரம்: சாலை அகரத்தில் விதவிதமான கைவினைப் பொருட்கள் விற்பனை
பொதுமக்களுக்கு கைவினைப் பொருட்கள் வாங்குவதிலும் செய்வதிலும் அதிக அளவு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகள், அலுவலகங்கள் அலங்கரிப்பது வீட்டிலுள்ளவர்கள் என அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.புது புது வகையான பொம்மை வகைகள், கைவினைப் பொருட்கள், உருவ பொம்மைகள், சுவரில் வைப்பது, வீட்டின் முன் தொங்க விடுவது போன்ற பல வகைகளில் விதவித அலங்காரப் பொருட்களை சாலை அகரத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.
சாலை அகரம் என்றாலே, பல வகையான அலங்கார பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறார்கள். 5 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை பொருட்கள் விற்கப் படுகின்றன. பல்வேறு மாவட்டங்களுக்கும் இங்கு தயாரிக்கப்படும் கைவினை பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சென்னை, சேலம், பாண்டிச்சேரி, திண்டிவனம் போன்ற பல ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
மேலும் இவர்கள் தயாரிக்காத ஒரு சில அலங்கார பொருட்களை பாண்டிச்சேரியிலிருந்து விலைக்கு வாங்கிக்கொண்டு வந்து, இங்கு ஒட்டு மொத்தமாகவும் விற்பனை செய்கிறார்கள்.
பழமையான பல்வேறு வகையான பொருட்கள் இங்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிகளவில் இங்கு வருகை புரிந்து, தங்களுக்கு தேவையான கைவினைப் பொருட்களை வாங்கி செல்கின்றனர். வியாபாரிகளும் உற்சாகத்துடன் விற்பனை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.