விழுப்புரம் டூ கிழக்கு பாண்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சாலை அகரம் என்ற கிராமம் . சாலை அகரம் கிராமம் என்றாலே பொது மக்களுக்கு முதலில் ஞாபகம் வருவது மண்பாண்டங்கள் தான். சாலை அகரம் பகுதியில் தான் அதிக அளவில் குயவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் பிரதான தொழில் களிமண்ணால் செய்யப்படும் மண்பாண்டங்கள்.
சாலை அகரம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு இருப்பவர்களின் முக்கியத் தொழில் என்னவென்றால் களிமண்ணால் வீட்டுக்குத் தேவைப்படும் உபயோக பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள் ( மண்பானை, ஜாடிகள், குதிரை பொம்மைகள்,அகல் விளக்குகள், வீட்டு அலங்கார பொருட்கள், கடாய், அடுப்பு ) போன்ற பல பொருட்களை தயார் செய்து உள்ளூர்களிலும், வெளி மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.
பண்டிகை காலங்களில் பண்டிகைகளுக்கு ஏற்றாற்போல கலைப்பொருட்கள் செய்து விற்பனை செய்கின்றனர்.
இந்த மண்பாண்டத் தொழில் குறித்தும் சாலை எழுத்தைப் பற்றியும் இப்பகுதியில் வசிக்கும் சிவஞானம் கூறுகையில், “நான் 40 வருடமாக மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன் என்னுடைய அப்பா தாத்தா காலத்திலிருந்து இந்தத் தொழில் செய்து வருகிறோம். சாலை அகரம் ஒரு மார்க்கெட் பகுதியாக விளங்குகிறது. இங்கு உள்ளவர்கள் அனைவருமே களிமண்ணால் செய்யப்படும் பொருட்களை தான் உற்பத்தி செய்கிறோம்.
எங்களுக்கு உறுதுணையாக எங்கள் வீட்டுப் பெண்மணிகள் இந்த மனங்களுக்கு சாயம் பூசுவது, சரி செய்வது, மண்ணை பதப்படுத்துவது போன்ற பல வழியில் எங்களுக்கு உறுதுணையாக உதவி புரிந்து வருகிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருட்களை வெளி மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றோம்.
அந்தந்த சீசனுக்கு ஏற்றார் போல நாங்கள் பொருட்களை செய்து சாலையோரத்தில் விற்பனைக்கு வைத்துவிடுவோம். பொதுமக்களும் தனக்கு தேவையான பொருட்களை நின்று பார்த்து வாங்கி செல்வார்கள். பின்பு பண்டிகை காலங்களில் தேவையான பொருட்களை தயார் செய்து விற்பனை செய்வோம்.
எங்களுக்கு வியாபாரமும் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல முறையில் செல்கிறது. நாங்கள் மகிழ்ச்சியுடன் இந்த தொழிலை செய்து வருகிறோம்” என சிவஞானம் கூறினார்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.