Home /local-news /

விழுப்புரம் : பயிறு வகைகளில் நோய் தாக்குதல் - பாதுகாப்பு முறைகள் என்னென்ன?

விழுப்புரம் : பயிறு வகைகளில் நோய் தாக்குதல் - பாதுகாப்பு முறைகள் என்னென்ன?

Villupuram: Safe guidelines on disease reduction in legumes

Villupuram: Safe guidelines on disease reduction in legumes

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது 32,500 ஹெக்டர் பரப்பில் பயறுவகை பயிர்களான உளுந்து, பச்சைப்பயறு மற்றும் காராமணி சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இப்பயிர்கள் வல்லம், மயிலம் மற்றும் விக்கிரவாண்டி வட்டாரங்களில் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளன.

    விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது 32,500 ஹெக்டர் பரப்பில் பயறுவகை பயிர்களான உளுந்து, பச்சைப்பயறு மற்றும் காராமணி சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இப்பயிர்கள் வல்லம், மயிலம் மற்றும் விக்கிரவாண்டி வட்டாரங்களில் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளன.

    தற்போது அப் பயிர்களில் ஆந்தராக்னோஸ் நோய், துருநோய், தண்டழுகல் போன்ற நோய்த் தாக்குதல் பரவலாகத் தென்பட்டு வருகிறது. பயிர்களில் உருவாகும் நோய்களைக் கட்டுப்படுத்தி மகசூலில் இழப்பு ஏற்படாமல் இருக்க பின்வரும் பயிர்ப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றும்படி வேளாண்மை இணை இயக்குநர் இரமணன் விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.


    ஆந்தராக்னோஸ் நோய் தாக்குதல்

    வட்ட வடிவில், கருப்பு நிறத்தில் இலைகள் மற்றும் காய்களில் காணப்படும் இந்த புள்ளிகளின் நடுவில் கருப்பு நிறமாகவும், ஓரங்களில் அடர் ஆரஞ்சு நிறத்துடனும் காணப்படும். மேலும், குளிரான மற்றும் ஈரமான காலங்களில் நோயின் தீவிரம் அதிகமிருக்கும். இதனைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட பயிரின் பாகங்களை அகற்றி, அழிக்க வேண்டும்.

    மான்கோசெப் 2 கிராம் / லிட்டர் அல்லது கார்பன்டசிம் 0.5 கிராம் / லிட்டர் என்ற அளவில் எடுத்து செடிகளின் மேல் தெளிக்க வேண்டும். இதைத் தெளிப்பதன் மூலம் நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர்.

    துரு நோய்யின் தாக்குதல்

    இலையின் அடிப்புறத்தில்,வட்ட வடிவ சிவப்பு கலந்த பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும். அதன் பின் காய்கள் மற்றும் தண்டுப் பகுதியிலும் தோன்றும். தீவிர தாக்குதலின் போது, இலையின் இருபுறமும் துரு போன்று முழுவதும் மூடியிருக்கும். இலைகள் சுருங்கி, உதிருவதால் விளைச்சல் குறையும். இது போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.
    ஆதலால் இதனைக் கட்டுப்படுத்த மான்கோசெப் 2.5 கிராம்/லிட்டர் தெளித்தால் துரு நோயிலிருந்து பயிர் ரகங்களை காப்பாற்ற முடியும்.


    தண்டழுகல் நோய் தாக்கம்

    செடியின் அடிப்புறத்தில் காய்ந்தும், மஞ்சள் நிறமாக மாறியும் செடிகள் காணப்படும்.

    இதனைக் கட்டுப்படுத்த கார்பன்டாசிம் அல்லது காப்பர் ஆக்ஸி குளோரைடு 1 கிராம் / லிட்டர் நீரில் கரைத்து பாதிக்கப்பட்ட செடிகளை சுற்றி மண்ணின் மேல் தெளிக்கவும்.

    இந்த மூன்று நோய் தாக்குதலில் இருந்து பயிர்களைக் காப்பாற்ற இந்த அறிவுரைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் வேளாண்மை இணை இயக்குனர் இரமணன் கேட்டுக்கொண்டுள்ளார்.


    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி