விழுப்புரம் : குடியரசு தினவிழா அலங்கார ஊர்திகளுக்கு உற்சாக வரவேற்பு
விழுப்புரத்தில் நெடுஞ்சாலையை அடைத்து விடுதலை போராட்ட தலைவர்கள், சிலைகள் கொண்ட அலங்கார ஊர்திகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 73வது குடியரசு தின விழா கடந்த மாதம் 26 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அவ்வாறு, கொண்டாடப்பட்ட குடியரசு தின விழா அணிவகுப்பில் விடுதலைப் போராட்ட வீரர்களின் சிலைகள் அடங்கிய தமிழகத்தின் சார்பில் அனுப்பப்பட்ட அலங்கார ஊர்திகள் மத்திய அரசால் அனுமதிக்கப்படவில்லை எனக்கூறி, தமிழக அரசு குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்திகள அணிவகுப்பு செய்தனர்.
அந்த அலங்கார ஊர்திகளை தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு, அனுப்பி வைத்து மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தி வருகின்றனர். அவ்வாறு காட்சிப்படுத்தப்பட்ட அலங்கார ஊர்திகள் மீண்டும் சென்னைக்கு கொண்டு செல்லும் வழியில் இன்று விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைந்த வளாகம் எதிரே விழுப்புரம்- சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டுள்ளன .
தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக சுதந்திரப் போராட்டத்தில் தமிழக வீரர்களின் பங்களிப்பை பறை சாற்றும் வகையில் அலங்கார ஊர்திகளில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப் படுத்தும் வகையிலான நிகழ்வை நடத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் எதிரே நெடுஞ்சாலை குறுக்கே அலங்கார ஊர்திகளை நிறுத்தி வைத்துள்ளனர் .
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் இது போன்ற அரசின் நிகழ்ச்சிகளை பொதுவெளியில் நடத்துவதோடு மக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்றும் இந்த கலை நிகழ்ச்சிகளை மைதானத்தில் வைத்து இருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் கூறுகின்றனர்.
மேலும் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் , வேலைக்கு செல்வோர், வெளியூர் களுக்கு செல்வோர் பேருந்துகளில் பயணம் செய்ய முடியாமல் போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகிஉள்ளனர்.பேருந்துகள் வெளியே வருவதற்கு சற்று சிரமமாக இருப்பது ஒருபுறம் சாலையில் கலை நிகழ்ச்சியும் இன்னொருபுறம் சாலையில் வாகனங்கள் போவதும் வருவதற்கு வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள் .
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.