Home /local-news /

'போராட்டங்களால் பொதுமக்களுக்கு தான் பாதிப்பு' - 2 மணி நேர காத்திருப்பால் மனவேதனையடைந்த பயணி..!!

'போராட்டங்களால் பொதுமக்களுக்கு தான் பாதிப்பு' - 2 மணி நேர காத்திருப்பால் மனவேதனையடைந்த பயணி..!!

The

The public is the affected by the protests 

Bharat Bandh - Villupuram | வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் விழுப்புரத்தில் 70 சதவிகித பேருந்துகள் இயக்கப்படவில்லை,

    12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தொழிற்சங்கங்களின் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    நாட்டின் முக்கிய தொழிற்சங்கங்கள் இணைந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குதல்,உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மற்றும் நாளை நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்துகின்றனர்.

    தொழிற்சங்கத்தினர், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள், அத்தியாவசிய பாதுகாப்பு பணிகள் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் கூடிய காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்து விலையவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும்பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், நூல் விலை உயர்வு மற்றும் ஜிஎஸ்டி வரி உயர்வு ஆகியவற்றை கைவிட வேண்டும்.அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    வேலை நிறுத்தம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பேருந்துகள் 70 சதவிகிதம் இயக்கபடவில்லை. இதன் காரணமாக பணிக்கு செல்லுபவர்களும், வெளியூர் பயணம் மேற்கொள்பவர்களும் அவதிக்குள்ளாகினர்.

    பேருந்துகள் இயக்கப்படாததால் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இரண்டு மணி நேரம் பேருந்திற்காக பயணிகள் காத்திருந்து பயணம் மேற்கொண்டனர்.

    டவுன் பேருந்துகள் இயக்கப்படாததால் கிராமப்புறங்களுக்கு செல்லக்கூடியவர்களும், பள்ளி மாணவர்களும் பாதிப்படைந்தனர். மேலும் அரசு பேருந்துகள் இல்லாததால், பயணிகள் அனைவரும் தனியார் பேருந்துகளுக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த சூழ்நிலை குறித்து திலக்ராஜ் என்ற பயணி கூறுகையில், அரசாங்கம் இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுவதால் பொது மக்களாகிய நாங்கள் மிகவும் பாதிப்படைந்து உள்ளோம். வேலைக்காக மற்ற ஊர்களுக்கு செல்வதற்காக காலையிலிருந்து காத்திருக்கும் நிலையில், அரசு பேருந்துகள் இல்லை.

    அரசுப் பேருந்து இல்லை என்றால் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று நினைத்தால், தனியார் பேருந்துகளும் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.

    குறைந்த எண்ணிக்கையில் இயங்கும் தனியார் பேருந்துகளிலும் அதிக கூட்டம் காணப்படுகிறது. பொது மக்களின் இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திலக் ராஜ் கூறினார்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram, Workers Strike

    அடுத்த செய்தி