Home /local-news /

விழுப்புரம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் - முழு விவரம்..

விழுப்புரம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் - முழு விவரம்..

Private Sector Employment Camp on 8th coming at Villupuram District 

Private Sector Employment Camp on 8th coming at Villupuram District 

Jobs at Villupuram | விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், வருகிற 8ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.

    விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை (ஏப்ரல் 8- ம் தேதி) தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

    விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், இதுவரை எழுதப்படிக்க தெரிந்தவர்கள், முதல் பட்டப்படிப்பு வரை என பல்வேறு கல்வித்தகுதிகளை பதிவு செய்து வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 3,41,594 ஆக உள்ளது. இதில், 1,72,265 பெண் பதிவுதாரர்களாகும்.

    இந்நிலையில் ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த 2019ம் ஆண்டு முதல் முறையாக நடந்த வேலைவாய்ப்பு முகாமில், 7,955 நபர்களுக்கு பணி நியமனம் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நாளை (ஏப்ரல் 8ம் தேதி) விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.

    இந்த வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, கலை மற்றும் அறிவியல், வணிகப்பட்டதாரிகள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., பி.டெக்., எம்.பி.ஏ., நர்சிங் போன்ற படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04146 226417 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழகாட்டும் மைய உதவி இயக்குநர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Jobs, Villupuram

    அடுத்த செய்தி