தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 28 ஆம் தேதி தொடங்கி 4 ஆம் தேதி வரையும், பிப்ரவரி 19 ஆம் தேதி வாக்குபதிவும் நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் நகர்புறபகுதிகளான புதியபேருந்துநிலையம், காமராஜர் வீதி, புதுச்சேரி- விழுப்புரம் சாலை ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சாலை தடுப்பு சுவர்கள், பாலத்தின் மீது எழுத்தப்பட்ட சுவர் விளம்பரங்கள், கட்சி கொடிகள் போன்றவற்றை நகராட்சி ஊழியர்கள் இன்று அகற்றியதோடு, சுவர் விளம்பரங்களை வெள்ளை அடித்து அழித்தனர்.
செய்தியாளர் : சு. பூஜா -விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.