விழுப்புரம்: முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்த போலீஸார்
தமிழகத்தில் கொரோனா மற்றும் மைக்ரேன் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பொதுமக்கள் நலன் வேண்டி ஆங்காங்கே மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு , மற்ற கிழமைகளில் பொது மக்கள் முகக் கவசம் இல்லாமல் வெளியே வந்தால் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் வாகனங்களை பரிசோதனை செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.
மேலும், முகக் கவசம் அணியாமல் பொதுஇடங்களில் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் நான்குமனை சந்திப்பில் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்பவர்களிடம் அபராதம் விதிக்கப்படுகிறது. உரிய ஆவணங்கள் இல்லாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு குழுக்களாக பிரிந்து கடைகள் மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
அதுபோல, முகக்கவசம் அணியாத நபர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.