விழுப்புரம் நகர பகுதியின் முக்கிய சாலையான நேருஜி சாலை, எம்.ஜி. ரோடு போன்ற சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளை, போக்குவரத்து போலீசார் அகற்றி கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்தனர்.
விழுப்புரம் நகர முக்கிய பகுதியான நேருஜி ரோடு, எம்.ஜி. ரோடு சாலையோரத்தில் ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, பள்ளி மற்றும் அலுவலக நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தன.
இந்த போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளருக்கு சாலை ஆக்கிரமிப்பு குறித்து புகார்கள் தெரிவித்தனர். இப்புகாரின் அடிப்படையில், போக்குவரத்து ஆய்வாளர் வசந்த் தலைமையிலான போலீசார் சாலையோரத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றினர்.
மேலும், சாலையை ஆக்கிரமித்து கடைகளை வைத்து நடத்தினால் அபராதம் விதிக்கப்படும் எனவும், பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் கடை உரிமையாளர்களை காவல் துறையினர் எச்சரிக்கை செய்தனர். அதுமட்டுமில்லாமல், இருசக்கர வாகனங்களை சாலையோரத்தில் ஆக்கிரமித்து நிறுத்தகூடாது எனவும் வலியுறுத்தினர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.