Home /local-news /

விழுப்புரம்:  நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்தை மாற்றிய காவல்துறை!

விழுப்புரம்:  நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்தை மாற்றிய காவல்துறை!

Villupuram:

Villupuram: Police diverted traffic to control congestion!

விழுப்புரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக,  மாவட்ட காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

    விழுப்புரம்: நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்தை மாற்றிய காவல்துறை!

    விழுப்புரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக, மாவட்ட காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்களுக்கு ஆன நேரம் என்பதால் விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை , விழுப்புரம் - புதுச்சேரி சாலை , கே. கே ரோடு , திரு.வி.க வீதி, காமராஜர் வீதி உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் ஏற்படுகின்றன.
    இதனைத் தடுப்பதற்காக அதிக அளவிலான காவல்துறையினர் போக்குவரத்து சீரமைப்பு பணியில் நாள்தோறும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

    இருப்பினும் பல இடங்களில் பள்ளி கல்லூரிகள் உள்ள இடங்களில், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுவதால் மாணவர்கள் சாலைகளை கடப்பதில் சிரமமும், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

    எனவே, காலை மாலை நேரங்களில் இதுபோன்ற போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க நகரின் ஒரு சில இடங்களில் குறிப்பாக நேரு வீதியில் பள்ளிகள் உள்ள சாலையை ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தும் நடைமுறையை போக்குவரத்து காவல்துறையினர் இன்று முதல் அமல் படுத்தி உள்ளனர்.

    அதன்படி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் வசந்த் குமார் தலைமையிலான காவல்துறையினர் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை, கிழக்கு சண்முகபுரம் காலனி ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகள் நிறைந்த இடங்களில் உள்ள இணைப்பு சாலைகளை ஒரு வழி பாதையாக மாற்றி நடைமுறைப்படுத்தினர்.

    அப்போது தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர்கள் ஒருவழிப்பாதையினால் சிரமத்திற்கு உள்ளாகினர். ஒரு சிலர் போக்குவரத்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    முன்னறிவிப்பின்றி இதுபோன்ற நடைமுறையை அமல்படுத்த வேண்டாம் என கூறி பெற்றோர், வேலைக்கு செல்வோர் , இரு சக்கர வாகன ஓட்டிகள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

    பின்னர் அவர்களுக்கு உரிய விளக்கம் அளித்து சமாதானம் செய்து போக்குவரத்து ஆய்வாளர் வசந்த் அனுப்பி வைத்தார்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Manosoundar M
    First published:

    Tags: Police, Villupuram

    அடுத்த செய்தி