Home /local-news /

விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி!!

விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி!!

விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி

விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி

Villupuram | விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையும் பரிசு வழங்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.

    தமிழக அரசு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில், இந்தாண்டு முதல், பாரம்பரிய முறையில் இயற்கை வேளாண்மையை பின்பற்றி அதிக உற்பத்தி செய்யும் விவசாயிகள், வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் நபர், உள்ளூர் புதிய தொழில் நுட்பங்களையும், இயந்திரங்களையும் கண்டுபிடிக்கும் விவசாயி ஆகியோரை ஊக்குவித்து மாநில அளவில் சிறந்த செயல்பாட்டிற்கான பரிசு விவசாயிகளுக்கு வழங்க உள்ளது.

    பரிசு பெற விரும்பும் விவசாயிகள் செய்ய வேண்டியது என்னவென்றால், முதலில் மொபைலில் உழவன் செயலி மூலமாக தங்களுடைய பெயரை பதிவு செய்து கொள்ளவேண்டும். பின் அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து,வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் நுழைவு கட்டணமாக 100 ரூபாய் செலுத்தி, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கட்டணம் செலுத்திய ரசீது இணைத்து இரு நகல்களில் வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

    இப்போட்டியில் சொந்த நிலம் உள்ள விவசாயிகள் மட்டுமல்லாது, குத்தகையில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளும் கலந்துகொள்ளலாம். தகுதியான விவசாயிகள் மாவட்ட தேர்வு குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட, பின் மாநில தேர்வு குழுவிற்கு பரிந்துரை செய்யப்படுவர்.

    அதன் பின் விண்ணப்பங்கள் மாநில குழுவால் பரிசீலிக்கப்பட்டு, மாநில அளவில் புதிய உள்ளூர் வேளாண் தொழில் நுட்ப கண்டுபிடிப்பிற்கு ஒரு விவசாயியும், புதிய வேளாண் இயந்திர கண்டுபிடிப்பதற்கு ஒரு விவசாயியும் தேர்வு செய்யப்பட்டு தலா ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் வேளாண்மை துறை அறிவித்துள்ளது.

    மேலும் இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ஒரு லட்சமும், இரண்டாம் பரிசாக 60 ஆயிரமும், மூன்றாம் பரிசாக 40 ஆயிரமும் வழங்கப்படும். இது தவிர வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 2 லட்சமும்,பரிசு வழங்கப்படும்.

    இப்போட்டியில் கலந்துகொள்ள தகுதியுள்ள விவசாயிகள் உடனடியாக தங்கள் பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு வேளாண்மை துறை அறிவித்துள்ளது.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Farmers, Villupuram

    அடுத்த செய்தி