விழுப்புரம்: பனங்கிழங்குக்கு ஸ்பெஷல்னா இந்த ஊர்தான்!
விழுப்புரம் விக்கிரவாண்டி ஒன்றியம் நரசிங்கனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு 50% பேர் பனை மரத்தைக் கொண்டு தொழில் செய்து வருகிறார்கள்.
அந்தந்த பருவத்திற்கு ஏற்றார்போல பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பனைப் பொருட்களை பயன்படுத்தி தொழில் செய்து வருகிறார்கள். பனை மரத்தில் இருந்து வரும் நுங்கு, பனை கிழங்கு, பனை ஓலை அனைத்தும் ஏதாவது ஒரு உணவு பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இந்த கிராமத்தில் பொதுமக்கள் அதிக அளவில் பனங்கிழங்கை தற்போது பயிரிட்டுள்ளனர். பனங்கிழங்கு அதிக நார் சத்துக்களை உள்ளடக்கிய உணவு. தற்போது பனங்கிழங்கு பருவம் என்பதால் ஊரைச்சுற்றி அதிகளவில் பனங்கிழங்கு பயிரிட்டு உள்ளனர்.
100 கிழங்கு அடங்கிய கட்டினை 150 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர் . செஞ்சி சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கஞ்சனூர், ஜெயங்கொண்டான் ,வாழப்பட்டு, வேலந்தூர் போன்ற பல பகுதிகளுக்கு இங்கிருந்து பனங்கிழங்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.