Home /local-news /

பெரியார் சிலை மர்மநபர்களால் சேதம்.. விழுப்புரத்தில் பரபரப்பு சூழல்...

பெரியார் சிலை மர்மநபர்களால் சேதம்.. விழுப்புரத்தில் பரபரப்பு சூழல்...

Damage to Periyar statue by mystics: Police are conducting a investigation 

Damage to Periyar statue by mystics: Police are conducting a investigation 

Villupuram District | விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம், பஜனைகோயில் தெருவில் கடந்த 21ஆண்டுகளாக பெரியார் படிப்பகம் செயல்பட்டு வருகிறது. படிப்பகத்தின் வாயிலில் தந்தை பெரியாரின் மார்பளவு சிலை உள்ளது.  இந்த சிலை தற்போது மர்ம நபர்களால் சேதப் படுத்தப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
    விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம், பஜனைகோயில் தெருவில் கடந்த 21 ஆண்டுகளாக பெரியார் படிப்பகம் செயல்பட்டு வருகிறது. படிப்பகத்தின் வாயிலில் தந்தை பெரியாரின் மார்பளவு சிலை உள்ளது. பெரியாரின் சிலைக்கு இரும்பு கூண்டு அமைக்கப்பட்டு பூட்டப்பட்டிருந்த நிலையில். நேற்று இரவு இரும்பு கூண்டின் பூட்டு உடைக்கப்பட்டு தந்தை பெரியாரின் முகம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் கதவை மூடிவிட்டு சென்றுள்ளனர்.

    இந்நிலையில் இன்று மதியம் அந்த வழியாக சென்ற பொது மக்கள் கூர்ந்து கவனித்த நிலையில் பெரியாரின் சிலையின் முகம் சேதப்படுத்தப்பட்டது தெரியவந்தது.

    இதனை அறிந்த திமுக, மற்றும் திராவிடர் கழகத்தினர் பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக்கூறி அப்பகுதியில் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

    சம்பவ இடத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா நேரில் வந்து விசாரனை மேற்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் இருந்த முழு உருவ தந்தை பெரியாரின் சிலை வடமாநில லாரி ஓன்றினால் சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இச்சம்பவம் நடந்திருப்பது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

    செய்தியாளர் :  சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Periyar Statue, Villupuram

    அடுத்த செய்தி