Home /local-news /

விழுப்புரம் : ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் அவலம்- வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை

விழுப்புரம் : ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் அவலம்- வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை

Not

Not enough space at paddy Regulatory Sales Hall: 

விழுப்புரம் மாவட்டத்தில் அதிகமாக திருவெண்னைய் நல்லூர் பகுதியான ஏமப்பூர், கன்னாரம்பட்டு, பெரிய செவலை, சரவணபாக்கம், எடையார், ஏனாதிமங்கலம், சிறுவானூர், பையூர், சின்ன செவலை, கண்ணராம்பட்டு, ஆமூர், மனக்குப்பம் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 30,000 ஏக்கரில் நெல் பயிரிடப்படுகின்றன.

மேலும் படிக்கவும் ...
    விழுப்புரம் : ஒழுங்கு முறை விற்பனைக் கூட அவலம்- வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை

    விழுப்புரம் மாவட்டத்தில் அதிகமாக திருவெண்னைய் நல்லூர் பகுதியான ஏமப்பூர், கன்னாரம்பட்டு, பெரிய செவலை, சரவணபாக்கம், எடையார், ஏனாதிமங்கலம், சிறுவானூர், பையூர், சின்ன செவலை, கண்ணராம்பட்டு, ஆமூர், மனக்குப்பம் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 30,000 ஏக்கரில் நெல் பயிரிடப்படுகின்றன.

    அப்படி பயிரிடக்கூடிய நெல்லை அறுவடை செய்யும் 50 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் விற்பனைக்காக திருவெண்ணெய் நல்லூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டு வருகின்றனர்.

    இந்த  ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 1500 நெல் மூட்டைகளை தேக்கும் அளவிற்கு மட்டுமே இடவசதி உள்ளது. போதிய இடவசதி இல்லாததால் விற்பனைக்காக கொண்டு வரும் நெல்களை விவசாயிகள் சாலையின் ஓரத்திலேயே கொட்டி வைத்தும், தெருக்களில் அடிக்கி வைத்தும் காத்து கிடக்கக் கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

    மழை, பனி போன்ற காலங்களில் விற்பனைக்காக கொண்டுவரப்படும் நெல், சாலை ஓரத்திலேயே கொட்டி 5 நாட்களுக்கு மேலாக காத்துக்கிடப்பதாகவும், ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தினை பாதுகாப்பான விசாலமான இடத்திற்கு மாற்றக்கோரிக்கை எழுந்துள்ளது.

    பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். சாலையின் ஓரத்தில் கொட்டி காத்து கிடப்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், நெல் மூட்டைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


    செய்தியாளர் : சு.பூஜா - விழுப்புரம்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி