திண்டிவனம் வட்டம் மயிலம் ஒன்றியம் விளங்கம்பாடி கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பழுதடைந்த நிலையிலும், சிதிலமடைந்தும் காணப்படுகிறது .
விழுப்புரம் அடுத்த விளங்கம்பாடி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் . ஊரை சேர்ந்த கிராம மக்கள் இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை தான் தங்களுடைய அன்றாட குடிநீர் தேவைக்காக நம்பி இருக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சிதலமடைந்து, பழுதடைந்தும் காணப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மேற்பகுதி திறந்தவெளியில் உள்ளதால், சுகாதாரமற்ற முறையில் குடிநீர் இருக்கிறது. மேலும் இந்த நீர்த்தேக்கத் தொட்டிக்கு, பதிலாக புதிய நீர் தேக்க தொட்டி கட்டி சுமார் ஒன்றரை ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கிறது. அந்த புதிய நீர்த்தேக்க தொட்டி.
இந்தப் புதிய தண்ணீர் தொட்டியை எப்போது திறக்கப்படும் என்ற ஏக்கத்தில் அக்கிராம மக்கள் காத்திருக்கின்றனர்.
மேலும் பழைய நீர் தேக்க தொட்டியின் சுவர்கள் பழுதுடைந்தும், தொட்டியின் மேல் பகுதி மூடிய நிலையில் இல்லாததாலும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது, அதுமட்டுமல்லாமல் தொட்டியின் அருகாமையில் அங்கன்வாடி, பஞ்சாயத்து அலுவலகம் போன்றன இருப்பதால் மக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டு வருகிறது.
நீர்த்தேக்க தொட்டியின் மூலம் ஏதேனும் விபரீதம் ஏற்படுவதற்குள், அப்படியே நீர்த்தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்தி, புதிய நீர்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.