Home /local-news /

'ஆதார் கார்டு கூட இல்லை...' கலெக்டரிடம் கண்ணீர் விட்டு கதறும் பூம்பூம் மாட்டுக்காரர்கள்.!

'ஆதார் கார்டு கூட இல்லை...' கலெக்டரிடம் கண்ணீர் விட்டு கதறும் பூம்பூம் மாட்டுக்காரர்கள்.!

Villupuram

Villupuram

Villupuram | `பெரிய மாட்டுக்காரர்கள்’ என்று அழைக்கப்படும் இவர்கள் பூம்பூம் மாட்டுக்காரர்கள் இன சமூகத்தை சார்ந்தவர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட சின்னசெவலை கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மக்களுக்கு ஆதார் அட்டை, வீட்டுமனை ஏதும் இல்லாததால் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப முடியாத அவல நிலை உருவாகி உள்ளது. இந்த நிலைமைக்கு கலெக்டர் உதவி புரிய வேண்டுமென கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுக்கின்றனர்.

    சின்ன செவலை கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி கட்டடம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகம் ஆகிய பகுதியை ஒட்டி ஆதி குடியினரின் மூன்று குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகஇந்தப் பகுதியில் வசித்து வருகிறார்கள் ஆதிகுடியினராவர். `பெரிய மாட்டுக்காரர்கள்’ என்று அழைக்கப்படும் இவர்கள் பூம்பூம் மாட்டுக்காரர்கள் இன சமூகத்தை சார்ந்தவர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

    இவர்களின் பிரதான தொழில் வீடு வீடாக சென்று மாடுகளை கொண்டு உதவி கேட்பதுதான். ஒரு சில ஆண்கள் மட்டும் திருஷ்டி பொம்மைகள் தயாரிக்கிற தொழிலில் ஈடுபட்டு வீடு வீடாக சென்று திருஷ்டி பொம்மைகள விற்று கொண்டுவருகின்றனர். இவர்கள் பல ஆண்டு காலமாக நிரந்தரமான குடியிருப்பு இல்லாமல், செல்லும் இடத்தில் எல்லாம் வாழ்ந்து வருகின்றனர்.

    பூம் பூம் மாட்டுக்காரர்கள்


    இவர்களுக்கு என இதுவரை நிலையான வீட்டுமனை கிடையாது, ஆதார் அட்டை கிடையாது,ரேஷன் அட்டை கிடையாது போன்ற பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.  இவர்களின் பிரச்வ்னை இவர்களின் பிள்ளைகளையும் பாதிக்கிறது. எந்த ஒரு அடையாளம் இல்லாத இவர்களின் பிள்ளைகளை, பள்ளியில் சேர்க்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

    இதுகுறித்து ஆதி குடிமக்களின் ஒருவரான செல்லம்மாள் கூறுகையில், தனது பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க சென்றபோது, ஆதார் கார்டு, இருப்பிடம் போன்ற எந்த ஒரு சான்றிதழும் இல்லாததால் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க முடியாது என்கிறார்கள் அதிகாரிகள் என்றும், இந்த ஊர் மக்கள் எங்களை ஒதுக்கி வைக்கிறார்கள் எனவும், எங்கள் வீட்டில் பெண் பிள்ளைகள் இருப்பதால் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான இடம் எதுவும் இல்லாமல் எங்களுக்கு மிகவும் அச்சமாக இருக்கிறது.

    நாங்கள் காலை முதல் இரவு வரை இந்த மரத்தடியில் உறங்கிக் கொண்டு இருக்கிறோம், எங்களின் பாதுகாப்பிற்கு ஒரு வீட்டு மனையும், எங்கள் பிள்ளைகளின் படிப்பிற்கு அவசியமான ஆதார் கார்டையும் வழங்கவேண்டுமென செல்லமாள் மாவட்ட நிர்வாகத்துக்கு ஆதிகுடி மக்களின் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளார்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி