Home /local-news /

விழுப்புரம்: உதவித்தொகை பெற மாணவர்களுக்கான தேசிய திறனறிவு தேர்வு

விழுப்புரம்: உதவித்தொகை பெற மாணவர்களுக்கான தேசிய திறனறிவு தேர்வு

Villupuram:

Villupuram: National Talent Search Exam (NTSE) for Scholarship Students

மேற்படிப்பிற்காக மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கான தேசிய திறனாய்வு தேர்வு இன்று நடைபெற்றது.

    மேற்படிப்பிற்காக மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கான தேசிய திறனாய்வு தேர்வு நடைபெற்றது.

    தேசிய திறனாய்வு தேர்வுஅரசு பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு மேற்படிப்பிற்காக 11ஆம் வகுப்பு முதல் முனைவர் பட்டம் பெறும் வரை மத்திய அரசின் சார்பில் மாதந்தோறும் கல்வி உதவித்தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

    இந்த கல்வி உதவித்தொகையை பெறுவதற்காக ஆண்டுதோறும் 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கான தேசிய திறனாய்வு தேர்வு 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
    இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவ- மாணவிகளுக்கு 11 ஆம் வகுப்பில் இருந்து அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக மாதந்தோறும் கல்வி உதவித்தொகை செலுத்தப்படும்.

    முதற்கட்ட தேசிய திறனாய்வு தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.  விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 11 தேர்வு மையங்களிலும், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 5 மையங்களிலும், செஞ்சி கல்வி மாவட்டத்தில் 4 மையங்களிலும் என விழுப்புரம் வருவாய் மாவட்டத்தில் மொத்தம் 20 மையங்களில் இத்தேர்வு நடந்தது.

    காலை 9 மணி முதல் 11 மணி வரை மனத்திறன் தேர்வும், 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை படிப்பறிவு தேர்வும் நடைபெற்றது. இதில் மனத்திறன் தேர்வில் பொதுஅறிவு சம்பந்தமான கேள்விகளும், படிப்பறிவு தேர்வில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப்பிரிவு சம்பந்தமான கேள்விகளும் கேட்கப்பட்டன.

    விழுப்புரம் பீமநாயக்கன்தோப்பில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் தூய இருதய மேல்நிலைப்பள்ளி, செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அல்ஹிலால் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Test, Villupuram

    அடுத்த செய்தி