முகப்பு /Local News /

நரிக்குறவர்கள் முற்றுகை போராட்டம்.. விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு...

நரிக்குறவர்கள் முற்றுகை போராட்டம்.. விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு...

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்

Villupuram | கீழக்கொந்தை பகுதியை சேர்ந்த நரிக்குறவ மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 30க்கு மேற்பட்ட நரிக்குறவர்கள் என்று மனு அளிக்க வந்தனர்.

  • Last Updated :

விக்கிரவாண்டி பேரூராட்சி கீழக்கொந்தை பகுதியை சேர்ந்த 30க்கு மேற்பட்ட நரிக்குறவ மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மனு அளிக்க வந்தனர்.

நரிக்குறவர்களின் 15 குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக குளம்புறம்போக்கு பகுதியில் வசித்து வருகின்றார்கள். இவர்களுக்கு வீட்டுமனைப்பட்டாவழங்கக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில்கோரிக்கை மனு கொடுத்தும் இதுநாள் வரையிலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி முற்றுகையிட்டனர்.

எங்கள் பகுதியில் தனியார் நிலம் உள்ளது. அந்த நிலத்தின் உரிமையாளரும் எங்களுக்காக நிலத்தை தர தயாராக இருக்கிறார். எனவே அரசு இதில் தலையிட்டு எங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கும்படிகேட்டுக்கொள்கிறோம் நரிக்குறவர்கள் கூறினார்கள்.

இதேபோல் விழுப்புரம் அருகே எருமனந்தாங்கல் தமிட்ட புளியமரம் பகுதியைசேர்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில்,நாங்கள் 10 குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கண்டபகுதியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.

இதற்காக பலமுறை விண்ணப்பித்துள்ள நிலையில் இதுநாள் வரையிலும் அதற்கானநடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளஎங்களுக்கு நாங்கள் குடியிருக்கும் இடத்தில் பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர்விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி நரிக்குறவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

நாங்கள் வசிப்பதற்கு வீடு இல்லாமல் வீதியில் இருக்கும் மரத்தடியிலும், மற்ற கட்டிடங்களில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து வருகிறோம். நாங்கள் கைக்குழந்தையுடன் வசித்து வருவதால் எங்களின் பாதுகாப்பு கருதி, எங்களுக்கு உடனடியாக ஏதேனும் உதவி பெற வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

top videos

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்

    First published:

    Tags: Villupuram