Home /local-news /

விழுப்புரம்: ஒரு விரலில் பணத்தை சுருட்டி  மனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி

விழுப்புரம்: ஒரு விரலில் பணத்தை சுருட்டி  மனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி

Villupuram:

Villupuram: Tamil Party, have nomination by rolling money in one finger

வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை உணர்த்தும் விதமாக,  நாம் தமிழர் வேட்பாளர்கள் ஒரு விரலில் பணத்தை சுருட்டி வந்து மனு தாக்கல் செய்தனர்.

    விழுப்புரம்: ஒரு விரலில் பணத்தை சுருட்டி மனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி

    வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை உணர்த்தும் விதமாக, நாம் தமிழர் வேட்பாளர்கள் ஒரு விரலில் பணத்தை சுருட்டி வந்து மனு தாக்கல் செய்தனர்.

    விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று, வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வருகை புரிந்து மனு தாக்கல் செய்தனர். நேற்றுவரை 711 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.மேலும், விழுப்புரம் நகராட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு விரல் புரட்சி நம் நாட்டையே மாற்றிவிடும் என்பதை வலியுறுத்தும் வகையில் இன்று மனுதாக்கல் செய்தனர்.

    அதாவது, வாக்கு விற்பனை அல்ல என்பதை வலியுறுத்தியும், ஒரு விரலால் வாக்களிப்பது மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், வாக்கை பணத்திற்காக விற்பனை செய்யக்கூடாது என்பதை உணர்த்தும் விதமாக நாம் தமிழர் கட்சி சார்பில்  முனுசாமி- 42 வது வார்டு, செந்தில் குமார்- 41 வது வார்டு, சத்திய நாராயணன் -29 வது வார்டு, குருநாதன் -14 வது வார்டு, இளையராஜா -36 வது வார்டு ஆகிய வேட்பாளர்கள் வாக்களிக்கும் விரலில் 500, 100 ரூபாய் பணத்தை சுருட்டிக் கொண்டு வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    இந்நிலையில் 16 வார்டில் சுயேட்சையாக போட்டியிட கூடிய ராஜேஸ்வரி என்ற பெண், தனது கைக் குழந்தையுடன் வருகை புரிந்து மறைமலைநகரில் உள்ள 16 வது வார்டுக்கு நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    செய்தியாளர் : சு . பூஜா - விழுப்புரம்
    Published by:Murugesh M
    First published:

    அடுத்த செய்தி